டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும், தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் - ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா” சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது ! டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் - ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா” சீரிஸின் டீசரை, பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியிட்டுள்ளது.

 

 

விரைவில் வெளியாகவிருக்கும் இந்த வெப் சீரிஸில் முன்னணி நட்சத்திர நடிகர்களான லால், அஜு வர்கீஸ் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  க்ரைம் இன்வெஸ்டிகேஷன் பின்னணியில்,  ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் வகையில் பரபரப்பான திரைக்கதையுடன் இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.  இந்த சீரிஸ் மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 



தற்போது வெளியாகியுள்ள புதிய டீசரில் லால் மற்றும் அஜு வர்கீஸ் பாத்திரங்கள் பாலியல் தொழிலாளியின் சவால் மிகுந்த கொலை வழக்கினை விசாரிக்கிறார்கள். அவர்களுக்குக் ஒரே ஒரு க்ளூ, ஒரு பெயர் மற்றும் லாட்ஜின் லெட்ஜரில் பொறிக்கப்பட்ட - "ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா" எனும் போலி முகவரி கிடைக்கிறது. இந்த சிக்கலான சவால் மிகுந்த வழக்கை காவல்துறையினர் எப்படி விசாரிக்கிறார்கள் என்பதை சுற்றியே இந்த சீரிஸின் கதை அமைக்கப்பட்டுள்ளது. படு சுவாரஸ்யமான திருப்பங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த ஒரு ஆழமான திரில்லர் வெப் சீரிஸாக இந்த சீரீஸ் உருவாகியுள்ளது. 



'“கேரளா க்ரைம் ஃபைல்ஸ் - ஷிஜு பாரையில் வீடு, நீண்டக்கரா”  சீரிஸை First Print Studios சார்பில் ராகுல் ரிஜி நாயர் தயாரித்துள்ளார், இயக்குநர் அஹம்மது கபீர் இந்த சீரிஸை இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸின் கதையை, திறமை மிகு கதாசிரியர் ஆஷிக் ஐமர் எழுதியுள்ளார், ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார், மகேஷ் புவனேந்த் படத்தொகுப்பு செய்துள்ளார்.


டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது இந்தியாவில்  பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது.

Popular posts from this blog

Movie Review : Inga Naan Thaan Kingu

Film Review: 7G The Dark Story

Movie Review: Boomer Uncle