துரங்கா சீசன் 2’ வின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து #ZEE5GameChangers உடைய பிரச்சார நிகழ்வை, புது தில்லி காவல்துறை தலைமையகத்தில் தொடங்கி வைத்தனர்

 


இந்நிகழ்வின் முதல்  பதிப்பில், DCP  மக்கள் தொடர்பாளர் சுமன் நல்வா மற்றும் பாலிவுட் நடிகை த்ரஷ்தி தாமி ஆகியோர் பல்வேறு சமூக பிரச்சனைகள் தொடர்பான உரையாடலில் ஈடுபட்டனர்.



 ZEE5 தளம் அதன் உள்ளடக்கத்தில் சமூக பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் அயலி, ஜன்ஹித் மெய்ன் ஜாரி, சத்ரிவாலி, ஹெல்மெட், அபார் ப்ரோலாய், அர்த் போன்ற பல படைப்புகளைக் கொண்டுள்ளது. 



ZEEL இன் OTT பிரிவின் ஒன்றாக செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி  வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, அதன் சமூக அக்கறைமிக்க படைப்புகளைச் சந்தைப்படுத்துதல் மற்றும் சமூகத் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த #ZEE5GameChangers நிகழ்வை அறிவித்துள்ளது. புது தில்லி தலைமையகத்தில் பெண் காவல் துறையுடன்,  'துரங்கா சீசன் 2' இன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து  இந்த பிரச்சார நிகழ்வைத் தொடங்கினர். இந்நிகழ்வில் பிரபல நடிகர்களான அமித் சாத், த்ரஷ்தி தாமி, முன்னணி இயக்குநர் ரோஹன் சிப்பி மற்றும் ZEE5 இன் AVOD மார்க்கெட்டிங் தலைவர் அபிரூப் தத்தா ஆகியோர் கலந்துகொண்டு, சட்ட அமலாக்கத் துறையில் பெண்களின் போராட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து ஆலோசித்து உரையாடினர். 


ஒரு பெண் காவலரின் கதையுடன் அடையாள திருட்டு பிரச்சினையை முன்னிலைப்படுத்தி, வரவிருக்கும் உளவியல் த்ரில்லர் ‘துரங்கா 2’ சீரிஸ் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மாதிரியான கதைகளுடன், பல்வேறு மொழிகளில் மற்றும் வடிவங்களில் இன்றைய சமூக பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் படைப்புகளை,  பொழுதுபோக்கின் வழியே  ZEE5 எப்போதும் வழங்கி வருகிறது. ரசிகர்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் #ZEE5GameChangers நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மிக அழுத்தமான தைரியமான மற்றும் சக்திவாய்ந்த கதைசொல்லல் மூலம் மாற்றத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், பொருத்தமான கருப்பொருள்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த ZEE5  முயல்கிறது. காவல்துறைப் பணியாளர்களின் அனுபவங்களையும் பயணத்தையும் பகிர்ந்து கொண்ட DCP PRO சுமன் நல்வா, துரங்காவின் முன்னணி நடிகையான த்ரஷ்தி தாமியுடன் இந்நிகழ்வில் இது குறித்த உரையாடலில் ஈடுபட்டார்.


டெல்லி காவல்துறை DCP  மக்கள் தொடர்பாளர் சுமன் நல்வா  கூறுகையில்.., 

“சமூக அக்கறையுடன் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படைப்புகளை ZEE5 வழங்கி வருவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, பார்வையாளர்களை மிக ஆர்வத்துடன் பார்க்க வைக்கும்  திறனை ZEE5  கொண்டுள்ளது. ZEE5 பெண் காவலர்களின் பணியை அங்கீகரித்துப் பாராட்டியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தில்லி காவல் படையின் பெண் காவலர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள். போராட்டங்கள் மற்றும் கஷ்டங்கள் இருந்தபோதிலும் அதைக் கடந்து சவாலான பணிகளைச் செய்கிறார்கள்.  அவர்களுக்குக் கிடைக்கும் இம்மாதிரியான பாராட்டுக்கள் அவர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதுடன் நகரத்திற்குச் சிறந்த முறையில் சேவை செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை அதிகரிக்கிறது.



ZEE5, AVOD மார்கெட்டிங் தலைவர் திரு. அபிரூப் தத்தா கூறுகையில்..,

 “ZEE5 இல், கல்வி மற்றும் சமூக அக்கறைமிக்க புதுமையான படைப்புகளில் முதலீடு செய்வதே எங்கள் முக்கிய நோக்கமாகும். கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடும் அதே வேளையில், நுகர்வோரை மையமாகக் கொண்ட பிராண்டாக நிஜ வாழ்க்கை சவால்களை எதிர்கொள்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தற்போதைய மாறிவரும்  சமூகத்தில் கதைசொல்லலின் உருமாறும் சக்தியை நாங்கள் நம்புகிறோம், மாறுபட்ட கதை சொல்லலின் வழியேவும்,  அதனைச்  சந்தைப்படுத்தும் முயற்சிகள் மூலமாகவே நாம் பரந்த பார்வையாளர்களை இணைத்து, அவர்களிடம் கல்வி மற்றும் பல கருத்துக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதை அங்கீகரிக்கிறோம். #ZEE5GameChangers மூலம், தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் முயற்சிகள் மூலம் எங்கள் பார்வையாளர்களுடன் இணைந்து, அனைவரும் தொடர்புகொள்ளும் ஒரு தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது போன்ற ஒவ்வொரு முயற்சியிலும், முக்கியத்துவம் வாய்ந்த உரையாடல்களை உருவாக்குவதையும், எங்கள் பார்வையாளர்களுக்கு மாறுபட்ட மற்றும் தரமான கதைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.


துரங்காவின் முன்னணி நடிகையான த்ரஷ்தி தாமி கூறுகையில்..,

"துரங்கா சீரிஸில் எனக்கு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி, தற்போது #ZEE5GameChangers முயற்சியால் டெல்லி படையில் உள்ள இந்த துணிச்சலான நிஜ வாழ்க்கை ஹீரோக்கள் / பெண் போலீஸ் அதிகாரிகளுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது இன்னும் மகிழ்ச்சி. இந்த விதிவிலக்கான பெண்களின் குறிப்பிடத்தக்கச் சாதனைகளைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், அவர்களின் உத்வேகப் பயணங்களைச் சுற்றியுள்ள முக்கியமான உரையாடல்களைத் தூண்டும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமை. சமூகத்தில் நிலவும் ஒரே மாதிரியான கருத்துகளை உடைத்து, குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்துவது, சமூகத்திற்கு அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் ஒரு தருணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன் மற்றும் அவர்களின் கதைகள் கேட்கப்பட வேண்டும் மற்றும் கொண்டாடப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்."



ZEE5 சமூ விழிப்புணர்வு கொண்ட அழுத்தமான கதைகளை அனைத்து மொழிகளிலும் வழங்கி வருகிறது உள்ளடக்கத்தை வழங்கி, ஒரே மாதிரியான கருத்தாக்கத்தை உடைத்து, பார்வையாளர்களை மேம்படுத்துவதற்கும் மாற்றத்தைத் தூண்டுவதற்கும் முக்கியமான உரையாடல்களைத் தொடங்குகிறது. அந்த வகையில் துரங்கா முதல் சீஸனானது 8 எபிசோடுகள் கொண்ட வெப்-சீரிஸ் ஆக ஆகஸ்ட் 2022 இல் வெளியிடப்பட்டது. இதனை ரோஸ் ஆடியோ விஷுவல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது இந்த சீரிஸில் அமித் சாத், த்ரஷ்தி தாமி மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோர் முன்னணி நடிகர்களாக நடித்துள்ளனர்.  இது  மர்மம் மற்றும் சஸ்பென்ஸ் கலந்து தொகுக்கப்பட்ட ஒரு வசீகரமான காதல் கதையை வழங்குகிறது. ரோஹன் சிப்பி இயக்கியுள்ள, துரங்காவின் சீசன் 2 அக்டோபர் 24, 2023 அன்று திரையிடப்பட்டது. இந்த சீசனில், இன்ஸ்பெக்டர் ஐரா தனது கணவரின் இருண்ட கடந்த காலத்தை ஆராய்வதால், ரசிகர்கள் மேலும் பல திருப்பங்களையும் ஆச்சரியங்களையும் எதிர்பார்க்கலாம்.



ZEE5  பற்றி

ZEE5  என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில்  கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள்  கொண்ட ஒரு பெரும் திரை  நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது. பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு  12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5    வழங்குகிறது.

Popular posts from this blog

Movie Review : Inga Naan Thaan Kingu

Movie Review : Mathimaran

Film Review: 7G The Dark Story