அவமானத்தைத் துடைப்பதற்கு 'இந்தத் துப்பாக்கியால் தான் நீ சாகப் போகிறாய் 'என்று வெறியோடு காத்திருக்கும் ஒரு சக்தி வாய்ந்த பாத்திரத்தில் வருகிறார். ஒட்டுமொத்த மூர்க்கத்தின் சின்னமாக வில்லன் பாத்திரத்தில் சம்பத்ராம் நடித்துள்ளார்.
அண்மையில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள 'மஞ்சுமல் பாய்ஸ்' படத்தில் நடித்த நடிகர் அட்ரஸ் கார்த்திக் ஒரு முக்கியமான பாத்திரத்தில் வருகிறார். தவிர,
இயக்குநர் மனோபாலா, 'விஜய் டிவி' ராமர், சேதுபதி ஜெயச்சந்திரன், 'கயல்' மணி, 'ராட்சசன்' யாசர் , அர்ச்சனா மாரியப்பன், ஸ்ரீ மகேஷ், சிரஞ்சன் கேஜி, பாரிவள்ளல், அருண்பிரசாத், கும்கி தரணி, அறந்தாங்கி மஞ்சுளா, ரோகிணி பழனிச்சாமி, ரியா, ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு GA சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட 'முந்திரிக்காடு' உட்பட ஆறு படங்களில் இவர் பணியாற்றி உள்ளார். நூற்றுக்கு மேற்பட்ட ஆல்பங்கள் உருவாக்கிய செல்வா இசையமைத்துள்ளார்.நான்கு பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார்.
'எஞ்சாமி' ஆல்பம் புகழ் தெருக்குரல் அறிவு, V.M. மகாலிங்கம் ,கயல் கோபு, ஸ்ரீநிஷா ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.
J. ஜெயபாலன் படத்தொகுப்பு செய்துள்ளார். மிரட்டல் செல்வா சண்டைக் காட்சிகள் அமைத்துள்ளார். இப்படத்தில் பிரம்மாண்ட சண்டைக் காட்சிகள் வருகின்றன. நடன இயக்குநர்களாக தினா, ஜாய்மதி பணியாற்றியுள்ளனர்.கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்துள்ளார்.
'கங்கணம்' படத்தின் படப்பிடிப்பு 70 நாட்கள் நடைபெற்றுள்ளது. மதுரை மேலூர், சென்னை, தேனி என்று பல்வேறுபட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
பழிவாங்குதலின் பரிமாணங்களைப் புதிய திரை அனுபவமாக உணரும் வகையில் இந்த 'கங்கணம்' திரைப்படம் உருவாகி இருக்கிறது .படப்பிடிப்புக்குப் பிந்தைய மெருகேற்றும் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.