நடிகர் சூர்யா நடிக்கும் ' ரெட்ரோ ' படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

 

நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் 'சூர்யா 44' படத்திற்கு ' ரெட்ரோ' என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக டீசர்  வெளியிடப்பட்டிருக்கிறது.



இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரெட்ரோ' எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஜாக்கி மற்றும் மாய பாண்டி ஆகிய இருவரும் இணைந்து கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஷபிக் முஹம்மத் அலி  மேற்கொண்டிருக்கிறார். லவ் வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகியிருக்கிறார்கள்.


இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான் ,ஊட்டி, கேரளா, சென்னை ஆகிய இடங்களில் நான்கு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில்  இப்படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான டீசர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நடிகர் சூர்யாவின் தோற்றம் வித்தியாசமாக இருப்பதாலும், காட்சிகள் விறுவிறுப்பாகவும் இருப்பதாலும், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.



Popular posts from this blog

Film Review: 7G The Dark Story

Movie Review : Jama

Movie Review : Virundhu