Priyamani starrer Good Wife drops on Jio Hotstar!


ஜியோஹாட்ஸ்டாரில் வெளியானது ‘குட் வொய்ஃப்’ இணையத் தொடர்...அதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் ஹைலைட்ஸ்!



ஜியோஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக இன்று வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம். தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இந்தத் தொடரை நடிகை-இயக்குநர் ரேவதி இயக்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக ரேவதி தமிழ் ஓடிடியில் அறிமுகமாகிறார். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

படத்தொகுப்பாளர் கிஷன், “மக்களுக்கு என்ன தேவையோ அதைத்தான் சிறப்பாக கொண்டு வந்தோம். ரேவதி மேமுடன் வேலை பார்த்தது புது அனுபவம். நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்”.

ஒளிப்பதிவாளர், துணை இயக்குநர் சித்தார்த் ராமசாமி, “இந்தப் படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ரேவதி மேம் என்னுடைய முதல் ஃபீமேல் டிரைக்டர். செம கூல்! நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.

நடிகை மேகா ராஜன், “ரேவதி மேமுடைய பல படங்கள் பார்த்து நான் வளர்ந்திருக்கிறேன். அவர் நடித்த படங்கள் போன்று இப்போது வருவதில்லை. அவருடன் வேலை பார்த்தது எனக்கு மகிழ்ச்சியான, பெருமையான அனுபவம். இந்த சீரிஸில் என்னுடைய லுக் எனக்கே மிகவும் பிடித்திருந்தது. இயக்குநராக அவங்க செம கூல். யாரிடமும் கோபப்படாமல் அமைதியாக வேலை வாங்குவதில் ரேவதி மேம் திறமையானவர்”.

நடிகை அம்ரிதா, “நடிகையாக என்னுடைய கனவு நிறைவேறி இருப்பதில் மகிழ்ச்சி. ரேவதி மேம் பார்த்த முதல் கணமே என்னுடைய விருப்பம் முழுமையானது. செட்டில் தினந்தோறும் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். ப்ரியாமணி, ஆரி, சம்பத் ராஜ் இவர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். நன்றி”.

பானிஜே ஆசியா வைஸ் பிரசிடெண்ட், “தமிழில் இரண்டாவதாக நாங்கள் இதைத் தயாரிக்கிறோம். ரேவதி மேம் இதை இயக்க, ஹலிதா இதற்கு வசனம் எழுதி இருக்கிறார். இண்டர்நேஷனல் அளவில் ஹிட்டான சீரிஸ் இது. தமிழ் பார்வையாளர்களுக்கும் இதை கொண்டு வந்திருக்கிறோம். பிரியாமணி, ஆரி, சம்பத்ராஜ் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் ஆரி, “வெப்சீரிஸ் நடிப்பதும் எளிது கிடையாது. இதிலும் பார்வையாளர்களை கட்டிப் போட வேண்டும். படம் செய்வதை விட பத்து மடங்கு வேலை இதில் இருக்கிறது. கோர்ட் டிராமாவை அடிப்படையாக் கொண்டு இந்தப் படம் வந்துள்ளது தமிழ் பார்வையாளர்களுக்கு நிச்சயம் புதிதானதாக இருக்கும். அனைத்து குடும்பப் பெண்களுக்கான நியாயத்தை இந்தக் கதை பேசும்.  இந்த வழக்கறிஞர் கதாபாத்திரத்திற்கு என்னுடைய அண்ணன் தான் இன்ஸ்பிரேஷன். ரேவதி மேம் படங்கள் எல்லாம் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். ‘மெளன ராகம்’ எனக்கு பிடித்த படம். அந்தப் பட ஹீரோயின் இயக்கத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. ‘குட் வொய்ஃப்’க்கான வரைமுறை இதுவரை நாம் என்ன யோசித்து வைத்திருக்கிறோமோ அது நிச்சயமாக இந்த வெப்சீரிஸூக்குப் பிறகு மாறும்” என்றார்.

நடிகர் சம்பத், “இந்த வாய்ப்பு கொடுத்த ரேவதி மேம்க்கு நன்றி. பிரியாமணி, ஆரி மற்ற நடிகர்கள் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. வெப் சீரிஸ் பொருத்தவரை ப்ரீ புரொடக்‌ஷன் மிகச்சரியாக இருக்கும். ரேவதி மேம் ரொம்பவே அமைதியான இயக்குநர். அவருடன் பணிபுரிந்தது சிறந்த அனுபவம்” என்றார்.

இசையமைப்பாளர் கே, “இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ரேவதி மேம் மற்றும் குழுவினருக்கு நன்றி. படத்தில் பணிபுரிந்தது நல்ல அனுபவம்” என்றார்.

அம்மா கிரியேஷன்ஸ் சிவா, “நாங்கள் தயாரித்த முதல் படத்தின் கதாநாயகி ரேவதி. அவர் இயக்கி நான் ஒரு கதையில் நடித்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. அப்போது பார்த்த அதே எளிமை, அன்புதான் இப்போதும். பிரியாமணி, சம்பத் என நண்பர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். என்னுடைய 44 வருட சினிமா அனுபவத்திலேயே இந்தக் கதை புதுவிதமான அனுபவம். ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படக் கூடிய கதைதான் இது. நன்றி”

நடிகை பிரியாமணி, “திரைப்படமோ அல்லது வெப்சீரிஸோ உங்களுக்கு வரும் வாய்ப்புகளை விட்டுக் கொடுக்காதீர்கள். தன் வாழ்க்கையில் வரும் சவால்களை எப்படி என் கதாபாத்திரம் தர்மிகா எப்படி எதிர்கொள்கிறது என்பதையும் இதில் பேசியிருக்கிறார்கள். நான்காவது முறையாக நான் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ரேவதி மேம் இயக்கப் போகிறார் என்றதும் உடனே சம்மதித்து விட்டேன். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக செய்திருக்கின்றனர். நாளை ஜூலை 4 ஜியோஹாட்ஸ்டாரில் இந்த வெப்சீரிஸில் வெளியாகிறது. நிச்சயம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்”.

நடிகை- இயக்குநர் ரேவதி, “ இதற்கு முன்பு படங்கள் இயக்கி இருந்தாலும் வெப் சீரிஸ் வாய்ப்பு வந்ததும் தயங்கினேன். ஏனெனில் படம் என்பது இரண்டு மணி நேரத்திற்குள் தொடக்கம் முடிவு என முடிந்துவிடும். ஆனால், வெப்சீரிஸ் அப்படி கிடையாது. நான் எழுத்தாளர் இல்லை என்பதாலும் யோசித்தேன். இந்த கதை நம் தமிழ்நாட்டுக்கு தமிழ் பார்வையாளர்களுக்கு கொண்டுபோய் சேர்க்கக்கூடிய ஒன்றுதான். இதன் கதையை ஹலிதா மிக அற்புதமாக எழுதி இருந்தார். அதில் சில மாற்றங்கள் மட்டும் செய்துவிட்டு முழுக்க முழுக்க இயக்குநராக இந்த கதையை இயக்கி இருக்கிறேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள்".











Popular posts from this blog

Web Series Review: Aindham Vedham

Film Review: 7G The Dark Story

Shakthi Thirumagan– A Landmark Film in Vijay Antony’s Career