JioHotstar South Unbound நிகழ்வினை முன்னிட்டு, JioStar Leadership குழுவினர் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர் !


JioStar Head Entertainment Business, South Cluster, கிருஷ்ணன் குட்டி, JioStar Executive Vice President – Tamil பாலச்சந்திரன் R, மற்றும் CEO – Turmeric Media  R. மகேந்திரன் ஆகியோர்,  இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து, வரவிருக்கும் JioHotstar South Unbound என்ற முக்கிய நிகழ்வைப் பற்றி விளக்கினர்.




இந்த சந்திப்பில், நிகழ்வின் நோக்கம்,  தென்னிந்திய கலாசாரத்தை முன்னிறுத்தும் வகையில் அது உருவாக்கும் தாக்கம் போன்ற பல அம்சங்கள் குறித்து குழுவினர் முதல்வரிடம் பகிர்ந்தனர். மேலும், ‘Letter of Engagement’ என்ற ஒப்பந்தத்தின் முக்கிய குறிப்புகளும் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டின் திரைப்பட மற்றும் ஊடகக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து திறமைகளை உருவாக்குவது, பயிற்சி வாய்ப்புகளை அதிகரிப்பது, படைப்புத் துறையை வலுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் JioStar வழங்கும் ஆதரவை குழுவினர் உறுதிப்படுத்தினர்.


டிசம்பர் 9, 2025 அன்று சென்னை நகரில் நடைபெறும் JioHotstar South Unbound  நிகழ்வு,  தென்னிந்திய சினிமா மற்றும் படைப்புத் திறனைக் கொண்டாடும் முக்கிய விழாவாகும். தென்னிந்தியாவின் முன்னணி இயக்குநர்கள், படைப்பாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள திறமைகள் இந்நிகழ்வில் பங்கேற்கிறார்கள். JioHotstar இன், புதிய தென் மாநில படைப்புகள், கதைகள்,  இந்த நிகழ்வில் வெளியிடப்படும்.


இந்த விழாவை தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார். பாராட்டுப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பத்மபூஷண் திரு. கமல்ஹாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.


தென்னிந்திய நடிகர்கள், இயக்குநர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறைகளின் முன்னணி படைப்பாளர்கள் பங்கேற்கும் இந்த விழா, தென்னிந்திய கலை மற்றும் கதைக்கூறும் மரபின் தாக்கத்தை உலகுக்கு முன்னிறுத்தும் முக்கிய தருணமாக இருக்கும். மேலும், தென்னிந்திய பொழுதுபோக்கு உலகை உயர்த்த, வளர்க்க, பலப்படுத்த JioStar மேற்கொள்ளும் தொடர்ந்த பங்களிப்பையும் இது மீண்டும் வலியுறுத்துகிறது.

Popular posts from this blog

Web Series Review: Aindham Vedham

Shakthi Thirumagan– A Landmark Film in Vijay Antony’s Career

Movie Review : Aan Paavam Pollathathu