SJ Suryah, Yashika Anand wrap up Kadamaiyai Sei shoot!

 இந்த அசாதாரண சூழ்நிலையிலும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் "கடமையை செய்"  திரைப்படம் படப்பிடிப்பு இனிதே நிறைவுற்றது.





 POST PRODUCTION வேலைகள் வெகு தீவிரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. கொரோனா இரண்டாவது அலைக்குப்பின் எடுக்கப்பட்ட படப்பிடிப்பில் ஒவ்வொரு முறையும்  நடிகர்கள், TECHNICIANS அனைவருக்குமான PCR TEST ( கொரோனா TEST ) எடுக்கப்பட்டு அதில் அனைவருக்கும் NEGATIVE என வந்தபிறகே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டனர். 




இப்படியாக இரண்டு மூன்று முறை தயாரிப்பு தரப்பில் கொரோனா CAMP அமைக்கப்பட்டு அனைவரும் NEGATIVE என உறுதிசெய்யப்பட்டு பிறகே படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நிறைய நட்சத்திர பட்டாளம் என்பதால் தயாரிப்பாளர்கள் மேலும் கூடுதல் கவனம் செலுத்தினார்கள் . 






இதில் S. J சூர்யா, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், இராஜசிம்மன், மோகன் வைத்யா, சேஷு, TSR, ராம்ஜி, ஜெயச்சந்திரன், ஹலோ கந்தசாமி ,  அரவிந்த், ஷர்மிளா, கீர்த்தி, மணிமேகலை, கிருஷ்ணவேணி, ரேகா, உமா, நிஷா, ஜெயவேல், பேபி ஹர்ஷிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.  கதை,திரைக்கதை வசனம் இயக்கம் வேங்கட் ராகவன்,  ஒளிப்பதிவு வினோத் ரத்னசாமி,  படத்தொகுப்பு N.B ஸ்ரீகாந்த் ,  இசை அருண்ராஜ்,  பாடல்கள் அருண்பாரதி,  சண்டை பயிற்சி பிரதீப் தினேஷ்,  நடனம் தீனா - சாண்டி. தயாரிப்பாளர்கள் TR ரமேஷ், ஜாகிர் உசேன்.

Popular posts from this blog

Movie Review : Inga Naan Thaan Kingu

Movie Review : Mathimaran

Film Review: 7G The Dark Story