Theerpugal Virkapadum director Dheeran's next with popular actor!
நம்பிக்கை தரும் புது இயக்குநர்...
சத்யராஜ் நடித்த 'தீர்ப்புகள் விற்கப்படும்' சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் தீரன் இயக்கியிருந்தார்.
'பாகுபலி' வெற்றிக்குப் பிறகு நடிகர் சத்யராஜ் பல படங்களில் நடித்திருந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யராஜ் கதாநாயகனாக நடித்த 'தீர்ப்புகள் விற்கப்படும்' விறுவிறுப்பு, சுவாரஸ்யம் நிறைந்த படமாக ரசிகர்கள், விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நீதி துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.
இந்தப் படத்துக்கு ஒரு விசேஷ அடையாளம் உண்டு என்று சொல்லலாம். 2021ஆம் ஆண்டு 31 ம் தேதி வெளியானது. இந்தப் படத்தை வரவேற்கும் விதமாக 2022 ஆம் ஆண்டு முதல் தேதியிலிருந்தும் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்துக்கு கிடைத்த வரவேற்பையொட்டி தெலுங்கு, மற்றும் இந்தியிலும் ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தெலுங்கு மற்றும் இந்தியில் முன்னணி நடிகர்கள் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.
இதற்கிடையே இயக்குநர் தீரன் தன்னுடைய அடுத்த படத்தை தமிழில் முன்னணி நடிகரை வைத்து பிரம்மாண்டமாக இயக்க உள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் தீரன் கூறியதாவது, "இந்த புத்தாண்டு எனக்கு மறக்க முடியாத ஒரு புத்தாண்டு என்று சொல்லலாம். ஏனெனில், படத்துக்கு எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு படைப்பாளியாக ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் தங்கள் ஆதரவை அளித்து என்னை இந்த புதிய ஆண்டில் மகிழ்வித்து இருக்கிறார்கள். எனக்கு கிடைத்த இந்த சந்தோஷம் என் சக இயக்குநர்கள் அனைவருக்கும் இந்த புத்தாண்டில் கிடைக்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை' என்றார்.
அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.