துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின் “லோகா” சாப்டர் 1 திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

 

துல்கர் சல்மானின் Wayfarer Films  தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் 1  - சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது.











இப்படம் ஒரு புதிய சூப்பர் ஹீரோ உலகை அறிமுகப்படுத்தி, மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு சென்றுள்ளது.


Wayfarer Films பேனரில் ஏழாவது படைப்பாக உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாளப் படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.


இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் அனைத்து மாநிலங்களிலும் ஊடக நண்பர்களையும், ரசிகர்களையும் சந்தித்து, நன்றி தெரிவித்து வருகின்றனர்.இன்று சென்னையில் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.


இந்நிகழ்வினில்


நடிகர் சந்து சலீம் குமார் பேசியதாவது…


என்ன பேசுவது என்றே தெரியவில்லை. முதலில் நண்பர் துல்கர் சல்மானுக்கு நன்றி. நண்பர் இயக்குநர் டோமினிக் அருணுக்கு நன்றி. கல்யாணி , நெஸ்லென் என உடன் நடித்த நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி. மம்மூட்டி சார் ஃபாரெவர் பெஸ்ட் ஃபிரண்ட் அவருக்கும் நன்றி. இந்தப்படத்தை இந்த அளவு எடுத்துச் சென்ற உங்கள் அனைவருக்கும் நன்றி.


டப்பிங் பார்வையாளர்  RB பாலா பேசியதாவது..,


இயக்குநர் டோமினிக் சாருக்கு நன்றி. வழக்கமாக மற்ற மொழி படங்களை வாய்ஸ் டப்பிங் செய்யும் போது சவாலாக இருக்கும். நான் 30 வருடங்களாக இந்த துறையில் இருக்கிறேன். இயக்குநர் டோமினிக் வித்தியாசமானவர்,  முதலில் செய்து தந்த டப்பிங்கை வேண்டாம் என்று சொல்லி விட்டார். அவர் இன்னும் கொஞ்சம் பேஸ் வேணும் மணிரத்னம் ஸ்டைல் வேணும் என்றார். முழுமையாக ரீ டப்பிங் செய்து தந்தேன் அவருக்கு பிடித்திருந்தது. துல்கருடன் முன்னரே வேலை செய்துள்ளேன், ஒரு முறை தான் டயாலாக் கேட்பார், ஒரு டேக்கில் முடித்து விடுவார். என்னை அசரவைத்த நடிகர். இந்தப்படத்தில் ஆச்சரியப்பட வைத்தது, கேமராமேன் தான், ஹாலிவுட் தரத்துக்கு செய்துள்ளார். கல்யாணியுடன் மரைக்காயர் படத்தில் வேலை பார்த்துள்ளேன், இந்தப்படத்தில் மிரட்டியுள்ளார். நஸ்லென் சின்ன சின்ன டயாலாக்குகளிலும் கச்சிதமாக செய்வார். அவர் கண்ணைக்காட்டினாலே அத்தனை உணர்வுகள் இருக்கும். எனக்கு சமீபத்தில் அதிக திருப்தி தந்த படம் இது. எல்லோருக்கும் நன்றி. முக்கியமாக இயக்குநருக்கு நன்றி.


எழுத்தாளர் சாந்தி பாலச்சந்திரன் பேசியதாவது… 

 

சென்னைக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. நாங்கள் நாங்களே பார்த்து சந்தோசப்படும் படத்தை செய்ய விரும்பினோம், இப்போது எல்லோரும் அந்தப்படத்தைக் கொண்டாடுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் டோமினிக் உடன் பல காலமாக வேலை செய்து வருகிறேன். அவருடன் இணைந்து எழுதுவது மிக சந்தோசமான அனுபவம். இந்த ஐடியா டோமினிக் தான் சொன்னார். நம் மண்ணில் சூப்பர்ஹீரோ செட் செய்வதை பற்றி மிக உற்சாகமாக பேசுவார். அவர் பார்வையை புரிந்து கொண்டு, எல்லோரும் உழைத்தார்கள். அவருக்கு ஆதரவு தந்த தயாரிப்பு தரப்புக்கு நன்றி. இப்போது நாங்கள் அடுத்த பாகத்திற்கு இன்னும் சிறப்பாக எழுத ஆரம்பித்துள்ளோம். அந்தப்படமும் உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.


நடிகர் அருண் குரியன் பேசியதாவது… 

 

மீடியா நண்பர்களுக்கு நன்றி. லோகா படத்தை கொண்டாடுவதற்கு நன்றி. இது என் மனதுக்கு நெருக்கமான படம். எங்களுக்கு இப்படம் மிகப்பெரிய பயணம்.  இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. எல்லோரிடமும் பாராட்டுக்களை பெறுவதை பார்க்க மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.


ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி பேசியதாவது…,


சென்னை என் இரண்டாம் வீடு. இங்கு தான் விசுவல் கம்மியூனிகேசன் படித்தேன். இப்போது மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. டோமினிக் ஒரு சின்ன ஐடியாவாக, ஒரு இண்டிபெண்டண்ட் படமாக தான் சொன்னார். அது வளர்ந்து வளர்ந்து இப்போது பிரம்மாண்டமாக வந்துள்ளது. அதை எல்லோரும் சேர்ந்து டெவலப் செய்து உங்களிடம் கொண்டு வந்துள்ளோம். உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. இன்னும் இந்தப்படத்தை அதிகமான பேருக்கு எடுத்துச்செல்லுங்கள் நன்றி.



Wayfarer Films சார்பில் அனூப் குமார் பேசியதாவது…,


இது AGS உடன் எங்களின் இரண்டாம் படம், இப்படத்தை பெரிய அளவில் எடுத்துச் சென்றதற்கு நன்றி. எல்லோரும் படத்தைக் கொண்டாடுவது மகிழ்ச்சி. இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் பார்க்காதவர்கள் எல்லோரும் படத்தை திரையரங்கில் பாருங்கள் நன்றி.


ஏஜிஎஸ் சார்பில் ஐஸ்வர்யா பேசியதாவது…,


லோகா என்னுடைய பெஸ்ட் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் படம். டிரெய்லர் பார்த்தவுடன் இப்படத்தை வெளியீடு செய்வது என முடிவு செய்து விட்டோம். துல்கர் சல்மான் எங்களுடன் இணைந்ததற்கு நன்றி. இரண்டாம் பாகமும் ரெடியாகி வருகிறது. கல்யாணி  படத்தில் கலக்கி விட்டார். எங்கள் நிறுவனம் மூலம் இன்னும் நல்ல படைப்புகள் தருவோம் நன்றி.  இப்படத்தின் அடுத்த பாகங்களும் வரும் உங்கள் அனைவரின் ஆதரவுக்கு நன்றி.


இயக்குநர் டோமினிக் அருண் (Dominic Arun) பேசியதாவது…,


இந்தப் பயணம் மிக நீண்ட, இனிமையான பயணம். உங்களுடன் எங்கள் படத்தை பகிர்ந்து கொள்வது மிகுந்த பெருமையாக இருக்கிறது. எங்கள் படத்தைப் பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி. இப்படத்தை கொண்டாடி வரும் அனைவருக்கும் நன்றி.



நாயகன் நஸ்லென் பேசியதாவது…,


நன்றி, எனக்கு என்ன சொல்ல வேண்டும் என்றே தெரியவில்லை, அந்தளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் லைஃபில் என்னென்னவோ நடக்கிறது, நான் நினைத்து பார்க்காததெல்லாம் நடக்கிறது. காலையில் சூர்யா சார், ஜோதிகா மேடம் போன் செய்து பாராட்டினார்கள். பலரும் பாராட்டி வருகிறார்கள் எல்லோருக்கும் நன்றி. எங்கள் படத்தை பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி.


கல்யாணி பிரியதர்ஷன் பேசியதாவது.., 

 

லோகாவிற்கு இந்தளவு பாராட்டு, வரவேற்பு கிடைக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. நீங்கள் ஆதரவு தந்தததால் தான், இந்த அளவு வெற்றி கிடைத்துள்ளது. இப்படத்திற்காக நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். அப்பாவிடம் ஆக்சன் பண்ணபோகிறேன், என்றவுடன் நீயா ஆக்சன் பண்ணபோறே? கால் கையெல்லாம் ஒழுங்காக பார்த்துக் கொள் என்றார். படம் 100 கோடி வசூலித்துள்ளது அதற்கு, நான் மட்டுமே காரணமில்லை. மொத்த குழுவின் உழைப்பு தான் காரணம். நான் மட்டும் கிரடிட் எடுத்துக்கொள்ள முடியாது. இப்படத்திற்கு இவ்வளவு பாராட்டுக்களை தந்த அனைவருக்கும் நன்றி.



நடிகர் தயாரிப்பாளர் துல்கர் சல்மான் பேசியதாவது…


நான் இந்தப்படத்தில் நடிக்கவில்லை, ஒரு டீச்சராக பசங்களை கூட்டி வந்துள்ளேன். நான் எந்த மொழியில் படம் செய்தாலும், இங்கு படம் பிரஸ்க்கு போட்டால், படம் நன்றாக இருந்தால், பிரஸ் உடனே பாராட்டுவார்கள், கொண்டாடுவார்கள் அவர்களுக்கு நன்றி. நாங்கள் இதை கேரளா அளவில் சின்னதாகத் தான் ஆரம்பித்தோம் இப்போது எல்லா இடத்திலும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. இதில் உழைத்த எல்லோரும் அவர்கள் படம் போல உழைத்தார்கள் இந்த வெற்றி அவர்களுக்கானது தான். கல்யாணியைத்தவிர  இந்தப்படத்திற்கு வேறு யாருமே செட் ஆகமாட்டார்கள் என்ற அளவிற்கு அவர் பொருத்தமாக இருந்தார். கதை சொன்ன மறுநாளே அவர் டிரெய்னிங் எடுக்க ஆரம்பித்துவிட்டார். நாங்கள் நினைத்ததை விட சிறப்பாக செய்துள்ளார்.  நேரடித்தமிழ்படம் போல இப்படத்தை டப்பிங் செய்து தந்த பாலா சாருக்கு நன்றி. இந்த அளவு வரவேற்பு நாங்களே  எதிர்பார்க்கவில்லை. இப்படத்தை ஐந்து பாகமாக எடுக்க திட்டமிட்டுள்ளோம். நான் எத்தனையோ படங்கள் நடித்துள்ளேன் இந்த அளவு கிரேஸ் பார்க்கவில்லை. அதற்கான மரியாதை உடன் அடுத்தடுத்த பாகங்களை எடுப்போம். லோகா மாதிரி இன்னும் அடுத்தடுத்து படங்கள் தருவோம். என் பேனரில் நான் மட்டுமே நடிக்க வேண்டும் என எப்போதும் நினைத்ததில்லை, எனக்கு சினிமா அவ்வளவு பிடிக்கும், என் பேனரில் மற்றவர்கள் நடிக்கும் படங்களும் தயாரித்து வருகிறோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள். இப்படத்தை வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.  அனைவருக்கும் நன்றி.


இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். அவருடன் நஸ்லென், சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், விஜயராகவன், சரத் சபா மற்றும் பல சிறப்பு தோற்றங்கள் வழங்கிய நடிகர்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.


ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.



தொழில் நுட்பக் குழு 


எழுத்து இயக்கம் - டோமினிக் அருண்

தயாரிப்பு - Wayfarer Films

ஒளிப்பதிவு - நிமிஷ் ரவி

எடிட்டிங் - சாமன் சாக்கோ

எக்சிக்யூட்டிவ் தயாரிப்பாளர்கள் – ஜோம் வர்கீஸ், பிபின் பெரும்பள்ளி

கூடுதல் திரைக்கதை – சாந்தி பாலச்சந்திரன்

மேக்கப் – ரோனக்ஸ் சேவியர்

உடை அலங்காரம் – மெல்வி ஜே, அர்ச்சனா ராவ்

ஸ்டில்ஸ் – ரோஹித் கே சுரேஷ், அமல் கே சதார்

புரடக்சன் கண்ட்ரோலர்கள் – ரினி திவாகர், விநோஷ் கைமோல்

சீஃப் அசோசியேட் – சுஜித் சுரேஷ்


இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.

Popular posts from this blog

Web Series Review: Aindham Vedham

Movie Review : Virundhu

Film Review: 7G The Dark Story