Rajamouli's RRR Trailer released!
பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள RRR திரைப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தெலுங்கு நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திரங்களான அஜய் தேவ்கன் அலியாபட் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சுதந்திரப் போராட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பாகுபலி திரைப்படத்திற்கு இசை அமைத்த மரகதமணி இசையமைத்துள்ளார். வெளியாவதற்கு முன்னரே 800 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நிகழ்த்தியுள்ள இந்த திரைப்படம் எதிர்வரும் ஜனவரி மாதம் 7ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது.