கலக்க வரும் புதிய கூட்டணி!ரோமியோ பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் பிளாக் ஷீப் ஊடக குழுவினரும் இணைந்து ஒரு புதிய படத்தை கருவாக்கி உருவாக்க இருக்கிறார்கள்



யூடியூப் சேனலாகத் தொடங்கி இன்று தங்களுக்கென ஒரு சேட்டிலைட் டிவி, ஓடிடி என வளர்ந்து நிற்கும் பிளாக் ஷீப் இளைஞர் பட்டாளத்தின் மற்றுமொரு மைல் கல்லாய் பள்ளிக்கூட பருவத்தை மையமாக வைத்த புத்தம் புதிய திரைப்படத்தை எழுதியிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான பல வெற்றிப்படங்களில் பங்களிப்பு செய்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் , பிளாக்‌ஷிப்பின் இந்த கனவுத் திரைப்படத்தை தயாரிக்கிறார்.

பிரபல டிஜிட்டல் , தொலைக்காட்சி மற்றும் மேடைப்பேச்சு  நட்சத்திரமான தமிழ்ப்பேச்சு ராஜ்மோகன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார்.

மக்களை மகிழ்விக்கும் பல நட்சத்திரங்களின் பட்டாளமே இந்தப் பள்ளிக்கூட படத்தில் உள்ளது. தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலோடு நட்சத்திரங்களின் பட்டியலும் விரைவில் வெளிவர உள்ளது.

டிசம்பர் 12ஆம் தேதி  படப்பிடிப்பு பணிகள் துவங்க உள்ளது. 90ஸ் கிட்ஸ் , 2k கிட்ஸ் என அனைவருக்கும் பிடித்த அழகான பள்ளிக்கூடத் திரைப்படமாக அடுத்த சம்மர் திரைக்கு வருகிறது ஒரு புதிய திறமைப் பட்டாளம்.

இந்த செய்தியை தீபாவளி இனிப்பாய் ஊடக உறவுகளோடு பகிர்ந்து கொண்டு மகிழ்கிறார்கள், பொது மக்களின் அன்பையும் ஆதரவையும்  எதிர்நோக்கி

Popular posts from this blog

Movie Review : Inga Naan Thaan Kingu

Movie Review : Mathimaran

Film Review: 7G The Dark Story