டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் இரண்டாவது மலையாள வெப் சீரிஸ் “மாஸ்டர்ஃபீஸ்” டீசர் வெளியீடு !

 

குடும்பத்தோடு ஒரு மகிழ்ச்சியான பயணத்திற்குத் தயாராகுங்கள்.  அனைவரும் பார்த்து ரசிக்க, முன்னணி ஸ்ட்ரீமிங்க் தளமான, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் இரண்டாவது மலையாள வெப் சீரிஸ்  "மாஸ்டர்ஃபீஸ்" டீசரை வெளியிட்டுள்ளது. 



டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் "மாஸ்டர்ஃபீஸ்'  சீரிஸில், முன்னணி நட்சத்திரங்களான நித்யா மேனன் மற்றும் ஷரஃப் U தீன், ரெஞ்சி பணிக்கர், மாலா பார்வதி, அசோகன் மற்றும் சாந்தி கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீமாகவுள்ளது.


"மாஸ்டர்ஃபீஸ்"  குடும்பத்தோடு ரசிக்கும் வகையில், நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான டிராமாவாக  இருக்கும்.  சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும், ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். 


இந்த சீரிஸை சென்ட்ரல் அட்வர்டைசிங் நிறுவனம் சார்பில், மேத்யூ ஜார்ஜ் தயாரித்துள்ளார். இயக்குநர் 

ஸ்ரீஜித் N இயக்கியுள்ளார். மாஸ்டர்ஃபீஸ் சீரிஸ், பற்றிய மற்ற தகவல்கள் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.


டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங்  ஓடிடி தளமாகும். இது இந்தியாவில்  பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது

Popular posts from this blog

Movie Review : Inga Naan Thaan Kingu

Film Review: 7G The Dark Story

Movie Review: Boomer Uncle