பொங்கல் திருநாளில் வெளியாகும் சைந்தவ்

 விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொலானு, வெங்கட் பொயனபள்ளி, நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் சைந்தவ் படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 13-ம் தேதி வெளியாகிறது.



விக்டரி வெங்கடேஷ்-இன் 75-வது படமாக உருவாகி வரும் சைந்தவ்-இல் அவரது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ஹிட்வெர்ஸ் படத்தை இயக்கிய சைலேஷ் கொலானு இப்படத்தை இயக்கி இருக்கிறார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்-இன் வெங்கட் பொயனபள்ளி இப்படத்தை தயாரித்துள்ளார்.

வெங்கடேஷ்-க்கு பொங்கல் வெளியீடு எப்போதும் நல்ல வகையில் அமைந்து இருக்கிறது. மேலும் நீண்ட நாட்கள் பண்டிகை விடுமுறையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் படக்குழு இந்த முடிவை எடுத்திருக்கிறது.

முன்னதாக இந்த படத்தில் நடித்திருக்கும் எட்டு மிகமுக்கிய கதாபாத்திரங்கள்- வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஆர்யா, ஷ்ரதா ஸ்ரீநாத், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா ஜெர்மியா, சாரா மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோரை படக்குழு வித்தியாசமாக அறிமுகப்படுத்தி இருந்தது.

சைந்தவ் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. பல்வேறு முன்னணி நடிகர்கள், மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடத்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஆர்யா, இப்படத்தில் ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். பாலிவுட்-ஐ சேர்ந்த பன்முகத் தன்மை கொண்ட நடிகரான நவாசுதீன் சித்திக், சைந்தவ் படத்தில் விகாஸ் மாலிக் கதாபாத்திரம் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

இப்படத்தின் நாயகியாக ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார். இவர் மனோயா என்ற கதாபாத்திரத்தில் நடத்துள்ளார். இவர்களுடன் ருஹானி ஷர்மா டாக்டர் ரேனுவாகவும், ஆன்ட்ரியா ஜெர்மியா ஜாஸ்மின் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை எஸ் மணிகண்டன் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பணிகளை கேரி பி.ஹெச். மேற்கொள்ள புரோடக்‌ஷன் டிசைனராக  அவினாஷ் கொல்லா, இணை தயாரிப்பாளர் கிஷோர் தல்லூர் ஆகியோர் உள்ளனர். 

நடிகர்: வெங்கடேஷ், ஆர்யா, நவாசுதீன் சித்திக், ஷ்ரதா ஸ்ரீனாத், ருஹானி ஷர்மா, ஆன்ட்ரியா ஜெர்மியா, சாரா

தொழில்நுட்ப குழு:

எழுத்து-இயக்கம்: சைலேஷ் கொலனு
தயாரிப்பாளர்: வெங்கட் பொயனபள்ளி
பேனர்: நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்
இசை: சந்தோஷ் நாராயணன்
இணை தயாரிப்பாளர்: கிஷோர் தல்லுர்
ஒளிப்பதிவாளர்: எஸ். மணிகண்டன்
படத்தொகுப்பு: கேரி பி.ஹெச்.
ப்ரோடக்‌ஷன் டிசைனர்: அவினாஷ் கொல்லா
வி.எஃப்.எக்ஸ். மேற்பார்வையாளர்: பிரவீன் காந்தா
நிர்வாக தயாரிப்பாளர்: எஸ். வெங்கடரத்னம்
மக்கள் தொடர்பு: வம்சி-சேகர், சதீஷ் குமார்
விளம்பர வடிவமைப்பாளர்: அனில் மற்றும் பானு

Popular posts from this blog

Movie Review : Inga Naan Thaan Kingu

Movie Review : Mathimaran

Film Review: 7G The Dark Story