சத்ய ஜோதி பிலிம்ஸ் வழங்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் Pre Release Event விழா !


சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள படம்  ‘கேப்டன் மில்லர்’. ஜனவரி 12 அன்று திரைக்கு வரவுள்ள,  இப்படத்தின் Pre Release Event விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், படக்குழுவினர், பத்திரிக்கையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 


இவ்விழாவினில்..


நடிகர் இளங்கோ குமரவேல் பேசியதாவது…

இந்தப்படத்தில் தனுஷை நான் பக்கத்திலிருந்து பார்த்தேன். தனுஷ் உழைப்பு பிரமிப்பாக இருந்தது. அவருடன் வேலைபார்த்தது நல்ல அனுபவம். ஷூட்டிங்கில்  நாங்கள் ஒரு மலையில் இருப்போம், அவர் அடுத்த மலையில் தூரத்தில் நிற்பார். இப்படத்திற்காக மிகக் கடுமையாக உழைத்துள்ளார். இயக்குநர் அருண் மிகச்சிறப்பாகப் படத்தை உருவாக்கியுள்ளார். எனக்கு இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு  நன்றி. 


நடிகர் வினோத் கிஷன் பேசியதாவது.. 

நான் தனுஷ் சாரின் மிகப்பெரிய ஃபேன். அருண் ப்ரோவுக்கும் நான் ஃபேன், இருவரும் இணையும் இந்தப்படத்தில் வேலைபார்த்தது எனக்கு கிஃப்ட் தான். மிகச்சிறப்பான அனுபவம். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. 










நடிகை நிவேதிதா சதீஷ் பேசியதாவது..

எனக்கு இந்தப்படம் கனவு மாதிரி இருக்கிறது. ஒரு இண்டர்வியூவில் எனக்கு ஹிஸ்டாரிகல் படத்தில் நடிக்கணும், பிரம்மாண்ட படத்தில் நடிக்கணும், தனுஷ் படத்தில் நடிக்கணும் என மூன்று ஆசைகளைச் சொல்லியிருந்தேன். அது மூன்றும் இந்தப்படத்தில் எனக்கு நடந்ததுள்ளது. தனுஷ் சாரின் தீவிர ஃபேன் நான். அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். இந்தப்படம் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். 


நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசியதாவது.. 

ஒரு பிரமாண்ட விழாவில் நானும் இருப்பது மகிழ்ச்சி. தனுஷ் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது. சினிமாவில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு, இயக்குநராக, நடிகராக, பாடகராக கலக்குகிறார். அவர் இயக்கத்தில் ஒரு சில காட்சிகள் நானும் நடித்திருக்கிறேன். மிக நல்ல அனுபவம், நிறையச் சொல்லித்தந்தார். இந்தப்படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். நடிகர் சிவராஜ் குமார் அவர்களுடன் வேலைப் பார்த்தது மகிழ்ச்சி. சுதந்திர காலத்துக்கு முன் நடக்கும் கதையில், இப்படிப்பட்ட பிரம்மாண்டமான படம் எடுக்க சத்யஜோதி பிலிம்ஸ் மாதிரியான நிறுவனம் வேண்டும். அவர்கள் இன்னும் நிறைய படம் எடுக்க வேண்டும். இம்மாதிரி படைப்பைச் சரியாக எடுத்துச்சென்ற இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி. 


நடிகர் காளி வெங்கட் பேசியதாவது.. 

தனுஷ் சாருடன் இது நாலாவது படம், இன்னும் நிறையக் கற்றுக்கொண்டே இருக்கிறேன். இயக்குநர் அருணை இறுதிச்சுற்று படத்திலிருந்தே தெரியும், ஆனால் இந்தப்படத்தில் தான் வாய்ப்பு தந்துள்ளார். நல்ல ரோல், உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். அனைவருக்கும் நன்றி. 


நடிகர் ராம்குமார்  பேசியதாவது.. 

சத்ய ஜோதி தியாகராஜன் சாருக்கு என் வாழ்த்துக்கள். படத்தில் சம்பாதிப்பதை, படத்திலேயே செலவு செய்கிறார். அவருக்கு இப்படம் வெற்றிப்படமாக அமைய வேண்டும். தனுஷ் அறிமுகத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவரது வளர்ச்சி மிகப்பெரியது. அவர் ஹாலிவுட் அவார்டை வெல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன். கேப்டன் மில்லர் 100 நாள் விழா கொண்டாட வேண்டும், அதில் நானும் கலந்துகொள்ள வேண்டும். அனைவருக்கும் நன்றி. 


நடிகர் எட்வர்ட் பேசியதாவது… 

இந்தப்படத்தில் வில்லன் நான். எல்லாப்படத்தையும் போல, ஹீரோவுடன் சண்டை போட்டுள்ளேன். தனுஷுக்கு நானும் தீவிர ஃபேன். இந்தப்படம் செம்மையான அனுபவமாக இருந்தது. படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி. 


மாஸ்டர் திலீப் சுப்புராயன் பேசியதாவது.., 

தனுஷ் சாருடன் எனக்கு 7 வது படம். மிகப்பெரிய ஜர்னி. கேப்டன் மில்லர் எனக்கு லைஃப் டைம் படம். இதில் சிஜுயெல்லாம் இல்லை, லைவ்வாக நிறைய எடுத்திருக்கிறோம். அருணும் நானும் காலேஜுல் இருந்தே ஃபிரண்ட்ஸ். இதில் நிறைய புதுசாக பண்ணியிருக்கிறோம். தனுஷ் சார் தண்ணீர் மாதிரி. எதில் வைத்தாலும், அதற்கேற்ற மாதிரி மாறிவிடுவார். இந்தப்படத்தில் அவரை நிறைய கஷ்டப்படுத்தியிருக்கிறேன். அதற்காக ஸாரி. சிவாண்ணாவுடன் ரொம்ப நாளாக வேலை பார்க்க ஆசைப்பட்டேன், இப்படத்தில் அது நடந்தது மகிழ்ச்சி. இப்படத்தில் கேர்ள்ஸ்க்கும் நிறைய ஆக்சன் காட்சி இருந்தது, டூப் போடாமல் எடுத்திருக்கிறோம். எல்லோரும் பயங்கரமாக கஷ்டப்பட்டு உழைத்தனர். இப்படம் பொங்கலுக்கு விருந்தாக இருக்கும். 


காஸ்ட்யூம் டிசைனர் காவ்யா பேசியதாவது.. 

தனுஷ் சாருக்கு நன்றி. இந்தப்படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறேன். இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக ஒரு விருந்தாக இருக்கும். நன்றி. 


கலை இயக்குநர் T ராமலிங்கம் பேசியதாவது..

இப்படத்திற்காக 1500 துப்பாக்கிகள் செய்தோம். இந்தப்படம் நிறைய வேலை வாங்கியது. அந்த காலகட்டத்தைத் திரையில் கொண்டு வருவது பெரிய சவால், ஒரு கற்கோயிலைக் கொண்டு வருவது பயங்கர சவாலாக இருந்தது. படம் பார்க்கும் போது எது செட் என்று உங்களுக்குத் தெரியவே தெரியாது. இப்படத்திற்காக என்னுடன் உழைத்த தொழிலாளிகள் அனைவருக்கும் நன்றி. சத்யஜோதி பிலிம்ஸ் புரொடக்சன் தரப்பில் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். அவர்களால் தான் இவ்வளவு பெரிய படம் சாத்தியமானது. தனுஷ் சாருடன் இரண்டாவது படம். கர்ணன் படத்தில் கண்டா வரச்சொல்லுங்க, பாடலில் வரும் படத்தை, நான் தான் வரைந்தேன். நான் தீவிரமான தலைவர் ஃபேன், அவரை நினைத்துத்தான் வரைந்தேன். தலைவருக்குப் பின் ஒரு நடிகராக தனுஷ் சாரை ரசிக்கிறேன். ரஜினி சாருக்குப் பிறகு அவர் தான். என் கல்லூரிக்கால நண்பர் அருண், அவருடன் வேலைபார்த்தது நல்ல அனுபவம். எனக்கு இப்படத்தில் முழுச்சுதந்திரம் தந்தார். இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். 


எடிட்டர் நாகூரான் பேசியதாவது.. 

எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்துள்ளனர். நானும் கஷ்டப்பட்டு எடிட் செய்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி. 


இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது.., 

இந்த மேடையில் இருப்பது, மகிழ்ச்சியாக இருக்கிறது.  தனுஷ் சார் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். கேப்டன் மில்லர் விஷுவல் பார்த்தால், எனக்குப் பயமாக இருக்கிறது. அடுத்த படத்தில் அவரை வைத்து என்ன செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை. கர்ணன் முடிந்தவுடன், அவருடன் வேலை பார்க்க சைன் பண்ணினேன். ஆனால் எனக்கு வேறு புராஜக்ட் வந்த போது,  என்னை அன்புடன் அனுப்பி வைத்தார். அதற்காக அவருக்கு நன்றி. கர்ணன் செய்யும் போதே, கேப்டன் மில்லர் ஒப்பந்தமாகிவிட்டார். கர்ணனை விட இதில் பயங்கரமாக வேலை பார்த்திருக்கிறார். அடுத்த படத்தில் இதை விட, உங்களுக்குப் பெரிய தீனி தர முயற்சிக்கிறேன். இப்படத்தில் என் நண்பர்கள் பலர் வேலைபார்த்துள்ளனர், அனைவருக்கும் வாழ்த்துக்கள். தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது நான் அங்கு போயிருந்தேன். அப்போது முதல் ஆளாக எனக்குக் கால் பண்ணி விசாரித்தவர் தனுஷ் சார். தனுஷ் சாரிடம் எப்போதும் நல்ல நட்பு இருக்கிறது. அவர் எப்போதும் சினிமாவை கவனித்துக்கொண்டிருக்கிறார். நிச்சயம் கேப்டன் மில்லர் மிகப்பெரிய வெற்றி பெறும் நன்றி. 


தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது.., 

இது மிகப்பெரிய படம். தனுஷ் சாருடன் இரண்டு தம்பிகள் அமர்ந்திருக்கிறார்கள், அவர்களைப் பார்த்தால் மகன்கள் மாதிரி தெரியவில்லை. அவர்களும் விரைவில் ஹீரோவாக வர வேண்டும். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம், அருண் மற்றும் இந்த டீமை நம்பி, மிகப்பெரிய படைப்பைத் தந்திருக்கிறார்கள். விஷுவல்கள் சூப்பராக இருக்கிறது. கண்டிப்பாக இப்படம் பொங்கலுக்கு பெரிய வெற்றிப்படமாக இருக்கும். 


பாடலாசிரியர் உமாதேவி பேசியதாவது... 

கேப்டன் மில்லர் நான் தனுஷ் சாருக்கு எழுதியிருக்கும் ரெண்டாவது பாடல். பட்டாஸ் படத்தில் புது சூரியன் பாடல் எழுதினேன், அவரை மனதில் வைத்துத்தான் எழுதினேன். இரண்டு பாடலும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தந்த வாய்ப்பு. இப்படத்தில் கோரனாரு என்ற பாடல் எழுதியிருக்கிறேன். கோரனாரு என்றால் யானை பலம் கொண்டவர் என்று அர்த்தம். இந்தப் பாடலுக்காக ஜீவி சாருக்கு நன்றி. இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கும் நன்றி. 


பாடலாசிரியர் விவேக் பேசியதாவது.. 

தன் கலைப்படைப்பு மூலம், எனக்கு நான் ராஜாவாக வாழுறேன், என வாழ்பவர் தனுஷ் சார். இளையராஜா சார் போன்ற ஆளுமைகள் கோலோச்சிய காலத்தில் நாம் இல்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கும். ஆனால் தனுஷ் சாரும் மிகப்பெரிய ஆளுமை தான், அவர் காலத்தில் அவருடன் இணைந்து பல படங்களில் பணியாற்றுவது, மிகப்பெரிய பெருமை. ஜீவி சார் மிகப்பெரிய சாதனைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அருண் மிகப்பெரிய உழைப்பாளி. அவருக்கு என் வாழ்த்துக்கள். இப்படத்தில் வேலைபார்த்த அனைவருக்கும் நன்றி.  


நடிகை பிரியங்கா மோகன் பேசியதாவது..

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். கேப்டன் மில்லர் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். அருண் சார் கதை சொன்ன போதே, ரொம்ப எக்ஸைட்டாக இருந்தது. எனக்கு ஹிஸ்டாரிகல் படங்கள் என்றாலே பிடிக்கும், அப்படிப்பட்ட படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. இப்படத்திற்காக அந்த காலகட்டத்தைக் கொண்டு வர, எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர். எனக்குத் துப்பாக்கி பிடிக்கவே தெரியாது, என்னை ஆக்சன் செய்ய வைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் என் நன்றியைச் சொல்ல வேண்டும். இவ்வளவு பெரிய படத்தை புரடியூஸ் பண்ணுவது மிகப்பெரிய வேலை, சத்ய ஜோதி பிலிம்ஸ் தந்த ஆதரவுக்கு நன்றி. ஜீவி சார் அட்டகாசமான இசையைத் தந்துள்ளார். சிவராஜ்குமார் சாருடன் இணைந்து நடித்தது பெருமை. அருண் உண்மையில் செம்ம ஜாலியானவர், கடுமையாக உழைத்திருக்கிறார். நான் தனுஷ் சாருக்கு பெரிய ஃபேன், அவருடன் சேர்ந்து நடித்தது சந்தோஷம். அவர் நடிப்பைப் பார்த்து மிரண்டிருக்கிறேன். இந்தப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இந்தப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.  நன்றி.

Popular posts from this blog

Movie Review : Mathimaran

Movie Review: Maal

Music Director Vidyasagar’s son Harsha Vardhan U makes musical debut in Sibi film!