இந்தியா முழுவதும் ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் வெளியீட்டில் வரவேற்பைக் குவிக்கும், "ககனச்சாரி" திரைப்படம் !
அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அருண் சந்து இயக்கத்தில், கோகுல் சுரேஷ், அனார்கலி மரிக்கார், அஜு வர்க்கீசு மற்றும் KB கணேஷ்குமார் நடிப்பில், டிஸ்டோபியன் சயின்ஸ் பிக்சன் ஜானரில், ஜுலை 5 வெளியாகயுள்ள மலையாளத் திரைப்படம் "ககனச்சாரி". இப்படத்தினை ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் இந்தியா முழுவதும் வெளியிட்டுள்ளது.
"ககனச்சாரி" சென்னை பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காகத் திரையிடப்பட்ட நிலையில், திடீர் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார் நடிகர் சுரேஷ் கோபி.
பிரபல முன்னணி மலையாள நடிகர் சுரேஷ்கோபி அவர்களின் மகன் கோகுல் சுரேஷ், ககனச்சாரி படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். புதுமையான களத்தில், சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் பெரும் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில், நேற்று சென்னை பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்காகத் திரையிடப்பட்டது. இத்திரையிடலுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த நடிகர் சுரேஷ்கோபி, படக்குழுவினரைப் பாராட்டி , தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.
கேரளாவில் இயற்கை பெருமளவு அழிந்து போன 2040 ஆம் ஆண்டில், மூன்று மனிதர்களிடம் ஒரு ஏலியன் பெண் அடைக்கலமாகிறாள். அதன் பிறகு நடக்கும் குளறுபடிகளைக் கலகலப்பான காமெடியுடன், புதுமையான திரைக்கதையில், புதுமையான களத்தில் சொல்லியிருக்கும் இப்படம், திரைவிழாவில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது முன் திரையிடல்களில் விமர்சகர் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
இத்திரைப்படம் கடந்த ஜூன் 21ஆம் தேதி கேரளாவில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படத்தினை ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் நிறுவனம் இந்தியா முழுவதும் வெளியிடுகிறது.