யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் 'ஸ்வீட் ஹார்ட் ' படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு

 


நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் ப்ரமோ வெளியீடு



திறமையான படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் திரைப்படங்களை தயாரித்து வரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஸ்வீட் ஹார்ட்' என பெயரிடப்பட்டு, இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.


அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், அருணாச்சலம், பௌஸி , சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சிவசங்கர் கலை இயக்கத்தை கவனிக்க, படத் தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொண்டிருக்கிறார். காதலை மையப்படுத்தி பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். 


இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டிலுக்கான காணொளி பிரத்யேகமாக வெளியிடப்பட்டிருக்கிறது. ஜூலை 27ஆம் தேதியன்று சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியின் போது, 'ஸ்வீட் ஹார்ட்' படத்தின் காணொளி வெளியிடப்பட்டதால் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறது. 


இந்த காணொளியில் நடிகர் ரியோ ராஜ் - அருணாசலம் - இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் - யுவன் சங்கர் ராஜா கூட்டணியின் ஜாலியான உரையாடல்களும், அது தொடர்பான காட்சிகளும் பார்வையாளர்களிடத்தில் புன்னகையை ஏற்படுத்தி, இன்ப அதிர்ச்சியை அளித்திருப்பதால்...  இந்த பிரத்யேக காணொளிக்கு பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.



Popular posts from this blog

Movie Review : Virundhu

Movie Review : Jama

Web Series Review: Aindham Vedham