Posts

Showing posts from May 2, 2026

வழக்கறிஞராக தீர்க்கமான பார்வையுடன் மிரட்டும் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் “சத்தியவான் சாவித்திரி” ஃபர்ஸ்ட் லுக் !

Image
  Zee studios & Drumsticks Productions தயாரிப்பில்,   கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிக்கும் “சத்தியவான் சாவித்திரி” பட ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது ! Zee studios & Drumsticks Productions  சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும்  உமேஷ் குமார் பன்சால்  தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள “சத்தியவான் சாவித்திரி” படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக், அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.   வக்கீல் கூட்டத்திற்கு நடுவே சிவப்பு உடையில், தீர்க்கமான பார்வையுடன் திரும்பி பார்க்கும் கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.  ஒரு சந்தோசமான சராசரி பெண்ணாக வாழும் கீர்த்தி, அவரது சீனீயர்  ஒரு வழக்கில் தவறான பக்கம் வாதாடும் போது, அதை அவருக்கு உணர்த்த முற்படுகிறாள். ஆனால் அப்போது தான் சீனியரின் அசல் முகம் வெளிப்படுகிறது. அந்த வழக்கு கீர்த்தியின் வாழ்வை புரட்டி போடு...

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

Image
  தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. “தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் அவரது ஸ்டைலில், இந்த முறை திரில்லர் மற்றும் நகைச்சுவையை இணைத்து குடும்பங்கள் ரசிக்கும் வகையில் “பரிமளா & கோ” உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதை, ஒரு வித்தியாசமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அந்த குடும்பத்தில் உள்ள மனிதர்களின் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் அபூர்வமான சம்பவங்கள் கதையின் மையமாக அமைந்துள்ளன. சென்னை நகரத்தைத் தொடக்கமாகக் கொண்டு கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு வரை பயணிக்கும் இந்த கதை, திரில்லர் பாணியிலும் நகைச்சுவை கலந்த காட்சிகளாலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்...