Posts

Showing posts from May 10, 2026

ZEE5 ஒரிஜினல் சீரிஸ் வழங்கும், பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா !

Image
ZEE5 வழங்கும் புதிய தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் தொடரான “வாரண்ட்” தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரிஸை Sivan Pictures, S Studios சார்பில், பிரசாந்த் பாண்டியராஜ், P விஷால், P M ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ளனர். விலங்கு சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ், விக்னேஷ் நடராஜன் உடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த சீரிஸை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார். வரும் 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இந்த சீரிஸின் டிரெய்லர் அறிமுக விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… கதையின் நாயகனாக அறிமுகமாகும் பிரபல இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் பேசியதாவது.., புரூஸ்லிக்குப் பிறகு எதுவும் இல்லாத நேரத்தில் விலங்கு செய்தோம். விலங்கு சீரிஸிற்கு நீங்கள் தந்த ஆதரவுதான் எங்களுக்கு மிகப்பெரிய அடையாளம் தந்தது. விலங்கு சீரிஸிற்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது நீங்கள் தான்....

‘வாரண்ட்’ – மே 22ல் வெளியாகும் ZEE5 தமிழின் அதிரடி கிராமப்புற குற்றக் கதை”

Image
  *முதன்மை கதாபாத்திரத்தில் விலங்கு, மாமன் பட இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிகராக அறிமுகம்* இந்தியா, XX மே 2026: தமிழ் ZEE5 தனது தைரியமான, வேரூன்றிய, சமரசமற்ற கதை சொல்லல் வரிசையை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, மே 22, 2026 முதல் ஒளிபரப்பாக உள்ள புதிய ஒரிஜினல் தொடர் ‘வாரண்ட்’-ஐ அறிவிக்கிறது. இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமாக பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கிறார். ‘விலங்கு’ என்ற கல்ட் ஹிட் தொடரையும் ‘மாமன்’ திரைப்படத்தையும் இயக்கிய இவர், இந்த தொடரில் நடிப்பதின்  மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகும் இந்த தொடருக்கு சாம் C.S. இசையமைத்துள்ளார். இந்த தொடரின் ஷோ ரன்னராகவும் நடிகர் தேர்வையும் பிரசாந்த் பாண்டியராஜ் மேற்கொண்டுள்ளார். மேலும், பாலாஜி சக்திவேல், கௌசல்யா, காளி வெங்கட், நம்ரிதா MV, அருள் ஜோதி, அருள் தாஸ், சாயா தேவி உள்ளிட்ட பலர் இணைந்து, கதைக்கு ஆழத்தையும் நம்பகத்தன்மையையும் வழங்குகின்றனர். ‘வாரண்ட்’ தொடர், அன்றாட போலீஸ் வழக்குகளின் கவனிக்கப்படாத உலகை ஆராய்கிறது, அவை மெதுவா...