“மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர் மனு ஆனந்த்
சர்தார், லப்பர் பந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் வினீத் ஜெயின் உடன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ மிஸ்டர் எக்ஸ்’ (Mr X ). இத்திரைப்படம் வரும் ஏப்-17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.. ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், சஞ்சனா சிங், காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.. எப்ஃஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். ஏப்ரல் 17ஆம் தேதி ‘மிஸ்டர் எக்ஸ்’ வெளியாக இருக்கும் நிலையில் இதன் டிரைலர் வெளியீட்டு நிகழ்வு வடபழனி விஜயா ஃபோரம் மாலில் உள்ள பேலசோ திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் *தயாரிப்பாளர் S.லஷ்மன்குமார் பேசும்போது,* இந்தப் படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி. இதில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடத்திருக்கிறார்களா என்கிற பிரமிப்பு ஏற்பட்டது. அதேபோல முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களது பங்களிப்பைக் கொடுத்திருக...