Posts

Showing posts from April 18, 2026

சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம் !

Image
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சீயான் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புதிய படம் ரசிகர்களுக்கு சிறப்பு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார்.   இந்த படத்தின் அறிவிப்பு, சீயான் விக்ரம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒரு ஸ்டைலிஷ் புரோமோ வீடியோவுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புரோமோ வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இப்போதே ரசிகர்கள் மத்தியில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை  பெருமளவில்  உயர்த்தியுள்ளது. தனித்துவமான கதைக்களம்  மற்றும்  ஸ்டைலிஷ் திரைக்காட்சிகளின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர்  ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். 2016 ல்  சீயான் விக்ரம் கூட்டணியில் இவர் இயக்கிய  “இருமுகன்”  படம், ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது இந்த கூட்டணி  10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை சத்யஜோதி பி...