பெண்களும் ரசிக்கும்படியான, உணர்வுபூர்வ., யூகிக்க முடியாத க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘இந்திரா’ !


உள்ளூர் சினிமாவில் தொடங்கி, உலகளவிலான சினிமா வரை வெகுஜன மக்களை ஈர்க்கும் மிக முக்கியமான ஜானர் ., திரில்லர் மற்றும் திகில் மட்டுமே. இவை இரண்டிலுமே வழக்கமான கதை மற்றும் காட்சியமைப்புகளை கையாண்டாலும், அவற்றை மிக ஆர்வத்துடன் பார்க்கும் பார்வையாளர்கள், அவற்றில் புதிய உத்தியை பயன்படுத்தி, கதை சொல்லல் மற்றும் காட்சியமைப்புகளில் வித்தியாசத்தை வெளிப்படுத்தினால், அத்தகைய படங்களை கொண்டாட தவறியதில்லை. அந்த வகையிலான ரசிக பெருமக்கள் கொண்டாடும் வரிசையிலான ஒரு படமாக பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது ‘இந்திரா’.



’இந்திரா’ என்ற தலைப்பும், அதில் நாயகனாக நடித்திருக்கும் வசந்த் ரவியும் தான், இப்படத்தின் முதல் வெகுஜன ஈர்ப்பாளர்கள். காரணம், 2017 ஆம் ஆண்டு வெளியான ‘தரமணி’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான வசந்த் ரவி, நினைத்திருந்தால் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கலாம், ஆனால் படங்களின் எண்ணிக்கையை விட, தரம் தான் முக்கியம் என்பதில் தீவிரம் காட்டுபவர் கதை தேர்வில் மிக கவனமாக பயணித்து வருகிறார். அவரது அத்தகைய பயணம் தான், தற்போது வசந்த் ரவி படங்கள் என்றாலே, விஷயம் இருக்கும் படமாகத்தான் இருக்கும், என்ற நம்பிக்கையை சினிமா ரசிகர்கள் மனதில் உருவாக்கியிருக்கிறது.


அந்த வகையில், வசந்த் ரவியின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சபரிஷ் நந்தா இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று (ஆகஸ்டு- 22 - 2025) திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘இந்திரா’ திரைப்படம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. குறிப்பாக, இரத்த வாடையில் நம்மை மூழ்கடிக்கும் காட்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட க்ரைம் திரில்லர் படமாக அல்லாமல், உணர்வுப்பூர்வமான யாரும் யூகிக்க முடியாத க்ரைம் திரில்லர் படமாக இருக்கிறது 'இந்திரா' , என்று படம் பார்த்த பெண்கள் கூறி வருவது இப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.


'இந்திரா' படம் வெளியான முதல் நாளிலேயே பார்வையாளர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் ‘இந்திரா’ படத்திற்கான திரையரங்குகள் அதிகரித்து வருவதோடு, மவுத் டாக் என்று சொல்லக்கூடிய வாய்மொழி விளம்பர மும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. எனவே, தமிழ் சினிமாவில் சமீபகாலங்களில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் வரிசையில் ‘இந்திரா’ படமும் நிச்சயம் இடம் பிடிக்கும் என்று திரையுலகினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


படம் வெளியான இரண்டே நாட்களில் பார்வையாளர்களின் கவனம் ஈர்த்திருக்கும் ‘இந்திரா’ திரைப்படத்தின் வெற்றிக்கு இயக்குநர் சபரிஷ் நந்தா மற்றும் நாயகன் வசந்த் ரவி ஆகியோரது கடின உழைப்பு மட்டுமின்றி, படத்தின் தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக் மற்றும் இர்பாஃன் மாலிக் ஆகியோரது தயாரிப்பு மற்றும் விளம்பர உத்திகளும் மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது. 


கமர்ஷியல் திரைப்படமாக மட்டுமின்றி தரமான படைப்பாக கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு படத்தை தயாரித்திருப்பதோடு, படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மிக நேர்த்தியாக செய்து வரும் தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக் மற்றும் இர்பாஃன் மாலிக் தமிழ் சினிமாவில் தவிர்க்க இயலாத பெரும் தயாரிப்பாளர்களாகவது மிக நிச்சயம்.

Popular posts from this blog

He-Man and Masters of the Universe Tamil Dub: Karthik Is He-Man, Adithya Menon Is Skeletor, Arjun Sarja Is Duncan

நடிகர் அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும் 'அருள்வான்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Dubbing for “Athiradi” in Tamil Was a Memorable Experience – Director-Actor Basil Joseph