Posts

Actor Sivakumar's tribute to late actor Sridhar

Image
 2017 ஆகஸ்ட் 20-ஆம் தேதி சிவக்குமாரின் டைரி குறிப்பு. 1965 ஏப்ரலில் ஜெயலலிதா அம்மையாரோடு முதல் ஜோடியாக ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்திலே கதாநாயகனாக நடித்தவன் ஸ்ரீகாந்த்.  ஈரோட்டிலே பிறந்த அவன் அமெரிக்கத் தூதரகத்திலே பணிபுரிந்தவன். கே.பாலசந்தரால் மேடை நடிகராக பிரபலமடைந்தவர் வெங்கி என்கின்ற இந்த ஸ்ரீகாந்த். பாலசந்தருடைய மேஜர்காந்த் என்ற நாடகத்தில் ஸ்ரீகாந்த் என்ற பாத்திரத்தின் பெயரையே திரைப்படத்தில் அறிமுகமான போது தனக்குச் சூட்டிக்கொண்டான். நாகேஷ் நகைச்சுவையில் விஸ்வரூபம் எடுத்தவர். வாலி கவிதை உலகிலே கரை கண்டவர். வறுமையின் கோரப்பிடியிலே சிக்கி வாலியும் நாகேஷும் துவக்க நாட்களிலே சாப்பாட்டுக்கு திண்டாட்டம் போட்ட காலத்தில் ஸ்ரீகாந்த் தன் கையால் சமைத்துப் போட்டு மாம்பலம் க்ளப் ஹவுசில் அந்த இருவரையும் காப்பாற்றியபவர்.  கதாநாயகனாக சில படங்களில் நடித்தாலும் பின்னாளில் சிலநேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தனின் கதை, ராஜநாகம் போன்ற படங்களில் முத்திரைப் பதித்தவர். என்னோடு மதனமாளிகை, சிட்டுக்குருவி, இப்படியும் ஒரு பெண், அன்னக்கிளி, யாருக்கும் வெட்கமில்லை, நவக்கிரகம்  என பல படங்களில் ந...

South Indian Cinema PRO Union office bearers meet CM !

Image
 * சங்க உறுப்பினர்களின் நலனுக்கான சில கோரிக்கைகளை முன் வைத்து தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்களின் நிர்வாகிகள் 11.10.2021 திங்களன்று தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மு.பெ சுவாமிநாதனை சந்தித்தனர்.* தலைமைச் செயலகத்தில் 11th காலை 11.30 மணி அளவில் நடந்த இந்த சந்திப்பில் யூனியன் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் யுவராஜ்,இணைச் செயலாளர் கணேஷ்குமார் ஆகியோர் அமைச்சரைச் சந்தித்து சங்கத்தின் நலன் சார்ந்த 5 கோரிக்கைகளுடன் கூடிய மனுவை அளித்தனர். அந்த கோரிக்கைகளை படித்து பரிசீலித்த அமைச்சர் அடுத்த ஒரு மாதத்துக்குள் அவற்றை நிறைவேற்ற தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். முன்னதாக கடந்த வெள்ளியன்று தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் யுவராஜ், பொருளாளர் இரா.குமரேசன் சந்தித்து மேற்படி கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்  மு.பெ சுவாமிநாதனைச் சந்தித்து அந்த மனுவை அளிக்கக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே இச்சந்திப்பு மிகத் துரிதமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathy launches Criminal poster !

Image
 ' கிரிமினல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்த விஜய் சேதுபதி கமலா ஆர்ட்ஸ் சார்பில் மகேஷ் CP, தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் 'கிரிமினல்'. அறிமுக நடிகை ஜானவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில், அறிமுக நடிகர்களும், சில முன்னணி நடிகர்களும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர்  ஜானர் படமாகும். நாயகனின் அப்பா கொலை செய்யப்பட, அந்த கொலை பழி நாயகன் மீது விழுகிறது. ஒரு பக்கம் போலீஸ் துரத்த, மறுபக்கம் தனது தந்ததையை கொலை செய்த உண்மையான கொலையாளியை பிடித்து, தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் முயற்சியில் நாயகன் இறங்குகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் வகையில், சஸ்பென்ஸாகவும், த்ரில்லராகவும் சொல்லியிருக்கிறார்கள். 'கிரிமினல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி, தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அறிமுக கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை விஜய் சேத...

Sandy in serious role in 3:33 horror thriller !

Image
Bamboo Trees Productions  சார்பில்  T.  ஜீவிதா   கிஷோர்    தயாரிப்பில் ,  பிக்பாஸ்   புகழ்   சாண்டி   நாயகனாக   நடிக்க ,  இயக்குனர்   நம்பிக்கை   சந்துரு   எழுத்து ,  இயக்கத்தில்   உருவாகியுள்ள   படம்  3.33.  காலத்தின்   ஒரு   குறிப்பிட்ட   நேரத்தை ,  மையமாக   கொண்டு   வித்தியாசமான   கதை   களத்தில் ,  பாடல்கள்   இல்லாத ,  புதுமையான   ஹாரர்   திரில்லர்   திரைப்படமாக   இப்படம்   உருவாகியுள்ளது .  பிரபல   நடன   இயக்குனர்   சாண்டி   இப்படத்தின்   மூலம்   கதாநாயகனாக   அறிமுகமாகிறார் .  இப்படத்தில்   இயக்குனர்   கௌதம்   மேனன்   ஒரு   வித்தியாசமான   பாத்திரத்தில்   நடித்துள்ளார் .  3.33  படத்தின்   டிரெய்லர்   ரசிகர்களிடம்   பெரும்   எதிர்பார்ப்பை   குவித்த   நிலையில் ,  வரும்   அக்டோபர் ...