சாந்தனு பாக்யராஜ் - சீமான் இணைந்து நடிக்கும் “ஒரு கைதியின் டைரி” பட மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்வு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சாந்தனு பாக்யராஜ் நாயகனாகவும், சீமான் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையாக உருவாகிறது. குடும்ப உறவுகளின் உணர்வுகளுடன் ஆக்சன் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்களும் இணைந்த கதைக்களமாக இப்படம் அமையவுள்ளது. மதுரையின் வாழ்வியலும், அப்பா – மகன் உறவில் ஏற்படும் உணர்வுப்பூர்வமான மாற்றங்களும் கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெறுகின்றன. வெளியாகியுள்ள மோஷன் போஸ்டரில் சீமான் மற்றும் சாந்தனுவின் தோற்றங்கள், பின்னணியில் இடம்பெற்றுள்ள மதுரை கோயில் கோபுரங்கள், கையெழுத்துப் பிரதியைப் போன்ற வடிவமைப்பு ஆகியவை படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தை ஏ...