உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், Puri Connects இணையும் பான் இந்தியா திரைப்படம் "டபுள் இஸ்மார்ட்" , மார்ச் 8, 2024 அன்று மகா சிவராத்திரி நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது !


உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத் வெற்றிக் கூட்டணியில் "டபுள் இஸ்மார்ட்" , திரைப்படம் மார்ச் 8, 2024 அன்று மகா சிவராத்திரி நாளில் திரையரங்குகளில் வெளியாகிறது !!



மாபெரும் வசூல் சாதனை படைத்த இஸ்மார்ட் ஷங்கர் திரைப்படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில், உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் கமர்ஷியல் கிங் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மீண்டும் இணைகின்றனர். பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து இப்படத்தை Puri Connects நிறுவனம் சார்பில் தயாரிக்கின்றனர். விசு ரெட்டி தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றவுள்ளார். உஸ்தாத் ராம் பொதினேனி பிறந்தநாளைக்  கொண்டாடும் விதமாக (மே 15) படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்


இஸ்மார்ட் ஷங்கரின் தொடர்ச்சியாக அடுத்த பாகமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு "டபுள் இஸ்மார்ட்" என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்த புதிய பாகம் முதல் பாகத்தை காட்டிலும், இரட்டிப்பு மாஸ் மற்றும் இரட்டிப்பு பொழுதுபோக்கைக் கொண்டிருக்கும் வகையில் ஒரு அதிரடியான கதையைப் பூரி ஜெகன்நாத் எழுதியுள்ளார். இது மிகப் பிரமாண்டமாக மிகப்பெரும் பட்ஜெட்டில் உயர்தர தொழில்நுட்ப தரத்துடன் தயாரிக்கப்படவுள்ளது.


டபுள் இஸ்மார்ட் திரைப்படத்தின் டைட்டில் போஸ்டரில் திரிசூலங்கள் ரத்தம் தெறிக்கக் காட்சியளிக்கிறது. இந்த போஸ்டர் இஸ்மார்ட் சங்கர் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய சிறு அறிமுகத்தை வழங்குகிறது. 


டபுள் இஸ்மார்ட் திரைப்படம் பான் இந்தியா வெளியீடாக, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் மகா சிவராத்திரிக்கு மார்ச் 8, 2024 அன்று வெளியிடப்படவுள்ளது.


படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள்  பின்னர் அறிவிக்கப்படும்.


நடிகர்கள்: ராம் பொதினேனி


தொழில்நுட்பக் குழு:

எழுத்தாளர், இயக்குனர்: பூரி ஜெகன்நாத்

தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கவுர்

பேனர்: Puri Connects

CEO: விசு ரெட்டி

மக்கள் தொடர்பு : சதீஷ் குமார் (AIM)

Popular posts from this blog

Movie Review : Inga Naan Thaan Kingu

Movie Review : Mathimaran

Film Review: 7G The Dark Story