Posts

விதார்த் - யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் 'குய்கோ'

Image
  எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் குய்கோ. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சுப்ரமணியன் நாராயணன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் போஸ்டர், டீஸர், டிரைலர் மற்றும் பாடல்களை படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள். நவம்பர் மாதம் குய்கோ படத்தை வெளியிட இருக்கிறார்கள்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'லேபில்' சீரிஸின் இரண்டாவது டிரெய்லரை வெளியிட்டுள்ளது!

Image
  இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், இயக்குநர்  அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், மிகவும் எதிர்பார்க்கப்படும் லேபில் சீரிஸின் இரண்டாவது டிரெய்லரை வெளியிட்டுள்ளது.  புதுமையான காட்சிகளுடன் வெளியான இரண்டாவது டிரெய்லர் தொடரின் மீதான எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது. லேபில் சீரிஸிலிருந்து வெளியான ட்ரெய்லர் 1 மற்றும் ட்ரெய்லர் 2 ஆகிய இரண்டுமே, இந்த சீரிஸ் வலுவான கதைக்களத்தில் ஒரு அழுத்தமான படைப்பை, சுவாரஸ்யமாகத் தருமென்பதை உறுதி செய்துள்ளது. பரபரப்பான டிரெய்லர் பார்வையாளர்களிடம் இந்த சீரிஸை பார்க்கும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. லேபில், சீரிஸ் நவம்பர் 10 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. இந்த சீரிஸை இயக்கியதோடு, இதன் திரைக்கதையையும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல்  திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார். லேபில் சீரிஸை முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் CS இந்த சீரிஸிக்கு இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்ப...

Dwarka Productions தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் காமெடி திரில்லர் பூஜையுடன் இனிதே துவங்கியது !

Image
  Dwarka Productions  தயாரிப்பில், இயக்குநர் ரா.சவரி முத்து இயக்கத்தில்,   ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய காமெடித் திரைப்படம், பூஜையுடன் இனிதே துவங்கியது ! Dwarka Productions தயாரிப்பில், பிளேஸ் கண்ணன் - ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்கும், அறிமுக இயக்குநர்  ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் கலக்கலான காமெடி படமாக உருவாகும் புதிய திரைப்படம், பூஜையுடன் இனிதே துவங்கியது.  இப்படத்தின் பூஜை,  திரையுலக பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.  டார்லிங்க், இரும்புத்திரை, அண்ணாத்தே, ஹீரோ, மற்றும் மார்க் ஆண்டனி படங்களில், திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய  ரா.சவரி முத்து இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.  ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் கலகலப்பான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் ரச...

டெவில் திரைப்பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா !

Image
மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”.  சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது.  இந்த நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளர் ஜெயமோகன் பேசும் போது, ”இந்த உலகத்தில் இருக்கிற எல்லா விசயங்களையும் குறித்து கருத்து சொல்பவன் நான், ஆனால் ஒன்றைக் குறித்துப் பேச மட்டும் எனக்குத் தகுதியில்லை என்று கூறினால் அது கண்டிப்பாக இசை குறித்துத்தான். ஏனென்றால் எனக்கு இசையைப் பற்றி ஒன்றுமே தெரியாது.  ஒரு பாமரனாக இப்படத்தில் இடம்பெற்றிருக்கும்  பாடல்களும், பின்னணி இசையும்  எனக்குப் பிடித்திருக்கிறது.  எனக்கு மிகவும் பிடித்த டெவில் இசையமைத்திருக்கும் இப்படம் மாபெரும் வெற்றியை அட...

The Academy of Motion Picture Arts and Sciences Welcomes Global Star Ram Charan to the Actors Branch!

Image
  The Academy of Motion Picture Arts and Sciences (AMPAS) recently announced the induction of renowned Pan-Indian cinema superstar, Ram Charan, into its prestigious Actors Branch. Ram Charan, celebrated for his remarkable contributions to the world of cinema, joins the distinguished ranks of the Academy, the organization responsible for overseeing the Academy Awards, also known as the Oscars. This momentous announcement follows the recent triumph of the blockbuster film "RRR" at the 94th Academy Awards, where the movie secured the coveted Oscar for Best Original Song for its unforgettable track "Naatu Naatu." In recognition of his exceptional talents and impressive work in the film industry, Ram Charan now assumes his rightful place among his peers in the Actor's Branch. The Academy took to its official social media page to reveal the exciting news. The announcement not only celebrates Ram Charan's induction but also highlights the significance of his involv...

த"ங்கலான்" டீசர் வெளியீட்டு விழா!

Image
  ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா,  இன்று சென்னையில் படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.  இவ்விழாவினில் பிரமிக்க வைக்கும்  தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங்க் வீடியோ பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்குத் திரையிடப்பட்டது.  இந்நிகழ்வினில் கலந்துகொண்டு....  ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா பேசியதாவது...  சீயான் விக்ரம் சாருக்கு ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ்  நிறுவனத்துடன் முதல் படம், மிகவும் அன்பானவர், கடின உழைப்பாளி தன் வேலையை மிக அர்ப்பணிப்புடன் செய்பவர். நானும் பா ரஞ்சித்தும் விக்ரம் சாரை சந்திக்கச் சென்ற போது என்ன தேதிகள்  வேண்டும் என்றார்,  அந்த த...

ரா ..ரா .சரசுக்கு ராரா...'வயது வந்தவர்களுக்கான படம் என்றாலும் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும்:தயாரிப்பாளர் ஏ. ஜெயலட்சுமி பேச்சு!

Image
சென்சார் விதிகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்:  'ரா ..ரா .சரசுக்கு  ராரா...' படத்தின் இயக்குநர் கேசவ் தெபுர் பேச்சு! ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும்  படம் 'ரா ..ரா ..சரசுக்கு  ராரா...' இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார்.  கேசவ் தெபுர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ், இசை ஜி. கே.வி. 9 V ஸ்டுடியோஸ் நிறுவனம்  நவம்பர் 3 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுகிறது. இப்படத்தின் அறிமுக விழா இன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ ஜெயலட்சுமி பேசும் போது, "தயாரிப்பாளர்களுக்காகத் தைரியமாகக் குரல் கொடுக்கும் கே .ராஜன் அவர்கள் இங்கே வந்திருக்கிறார். அவரது துணிச்சலுக்காக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்க்கையில் எத்தனை பேர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்? இரண்டு மணி நேரம்  சந்தோஷமாக இருக்க வேண்டும் ,தன்னை மறந்து ஜாலியாக இருக்க வேண்டும் என்று தான் இந்தப் படத்தை எடுத்துள்ளோம் இப்பொழுது  கத்தி , வெட்டு குத்து, ரத்தம்...

'சீயான் 62' பட அறிவிப்பு காணொளி வெளியீடு

Image
சீயான் விக்ரம்  கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான 'சீயான் 62' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி',  'சிந்துபாத்', மற்றும் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற 'சித்தா'  திரைப்படத்தை இயக்கிய S. U. அருண்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு 'சீயான் 62' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.  இயக்குநர் S. U. அருண்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளி வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த காணொளி...

தன்னை செதுக்கிய திரையுலக சிற்பிகளுக்கு ஜப்பான் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நன்றி தெரிவித்த கார்த்தி

Image
பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25வது படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது.  கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்க நடிகர் சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விஜய் மில்டன் மற்றும் மலையாள நடிகர் சணல் அமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ வரும் தீபாவளி பண்டிகை வெளியீடாக ரிலீஸாக இருக்கிறது.  இதை தொடர்ந்து இந்தப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவையும் கார்த்தி25 என இரண்டு திரையுலக பயணத்தையும் ஒரு சேர கொண்டாடும் வகையில் சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்ட  விழா நடைபெற்றது. இந்தநிகழ்வில் ஜப்பான் படக்குழுவினருடன் நடிகர்கள் சூர்யா, விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, அனு இம்மானுவேல், கே.எஸ்.ரவிகுமார், ராஜ்கிரண், அர்ஜுன் தாஸ், மாஸ்டர் ரித்விக், தமன்னா, யுவன் சங்கர் ராஜா...