மண்டாடி' திரைப்படத்தின் வெற்றி விழா!
அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றுள்ள படம் 'மண்டாடி '. இப்படத்தில் சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் மற்றும் ஸ்டன் சிவா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருந்தார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்புக்கு பிரதீப் இ. ராகவ், கலை இயக்கம் : டி.ஆர்.கே. கிரண், ஆக்ஷன் காட்சிகளுக்கு பீட்டர் ஹெய்ன் எனப் பணியாற்றியிருந்தனர்.ஆர். எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட்குமார் தயாரித்திருந்தார். 'மண்டாடி' படத்தின் வெற்றி மகிழ்ச்சி பகிர்வுக் கொண்டாட்டம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. அந்த அரங்கமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வருகை தந்திருந்த அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி ஒளி படர்ந்திருந்தது. விழாவில் கலந்து கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, "ஒரு படத்தைப் பற்றி பேசும்போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது மக்களுடைய ஏற்புதான் .மக்கள் ஏற்றுக்கொண்டு கொண்டாடுகிறார்கள் என்கிறபோது நாம...