Posts

Showing posts from October 28, 2026

சந்தீப் கிஷன், உகந்தர் முனி, ஷைனிங் பிக்சர்ஸ் இணையும் ‘கரிகாலா’ திரைப்படம் பூஜையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கியது!

Image
  நம்பிக்கைக்குரிய இளம் கதாநாயகர்களில் ஒருவரான சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான பான்-இந்தியா சமூகக் கற்பனைத் திரைப்படமான ‘கரிகாலா’,  திரையுலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்ட பாரம்பரிய பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. உகந்தர் முனி இயக்கத்தில், ஷைனிங் பிக்சர்ஸ் சார்பில் மஹிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு தயாரிக்கும் இப்படம், புராணம், கற்பனை, சாகசம் மற்றும் சமூகக் கூறுகள் எனப் பல்வேறு அம்சங்களின் கலவையாகப் பிரம்மாண்டமான அளவில் உருவாகிறது. கேத்ரின் தெரசா, சாக்ஷி மடோல்கர் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். தயாரிப்பாளர் ராஜசேகரின் தாயார் சத்யவதி அவர்கள் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். தயாரிப்பாளர் மஹிதர் ரெட்டியின் தாயார் பத்மா ரெட்டி அவர்கள் கிளாப் அடித்தார். நடிகர் ஆதி சாய்குமார் முதல் காட்சியை இயக்கினார். தயாரிப்பாளர் ராஜசேகர் அன்னபிமோஜுவின் தந்தை வீர பிரம்ம சாரி அவர்கள் படத்தின் திரைக்கதையைப் படக்குழுவினரிடம் வழங்கினார். *படத்தின் தொடக்க விழாவில் பேசிய கதாநாயகன் சந்தீப் கிஷன் கூறியதாவது:* “ ‘கரி...

நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Image
கமும் ஆக்‌ஷனும் கலந்த பிரம்மாண்டமான திரைப்படம்! கார்த்திகை மாதத்தில் வெளியிடத் திட்டம்! தந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மணிகண்டா’. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில், முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் ரவிமோகன் வெளியிட்டுள்ளார். ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்‌ஷன் அம்சங்கள் நிறைந்த திரைப்படமாக உருவாகியுள்ள ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக “தத் த்வம் அஸி” என்ற பெயரில் படமாக்கப்பட்ட இப்படத்திற்கு, தற்போது மணிகண்டா எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.  வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், நீல நிற ஆடையுடன் கையில் வேல் ஏந்தியபடி கம்பீரமான தோற்றத்தில் வைபவ் இடம்பெற்றுள்ளார். அவருக்குப் பின்னால் பிரம்மாண்டமான ஐயப்பன் சிலை, அதைச் சுற்றிலும் தங்க நிற ஒளியும் நெருப்புச் சுடர்களும் நிறைந்துள்ளன. விண்வெளியை நினைவூட்டும் பின்னணியும், ஆன்மீக உணர்வை வெளிப்படுத்தும் காட்சியமைப்பும் போஸ்டருக்கு பிரம்மாண்டமான தோற்றத்தை அளிக்கின்றன....

Family Boy teaser reveal !

Image
 நடிகர் சூர்யாவால் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின் திரைப்படம் ஃபேமிலி பாய் (Family Boy) - டீசர் வெளியீடு நடிகர் சூர்யாவால் தமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகரும், இயக்குநருமான மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஃபேமிலி பாய்- Family Boy' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.  இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபேமிலி பாய்- Family Boy' திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார் , நிகிலா சங்கர், அனிதா சம்பத், 'பசங்க' சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே  கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிர்மல் JP இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜிஜேந்திரன். V கவனிக்க, கலை இயக்கத்தை C. K. முஜிபுர் ரஹ்மான் மேற்கொண்டிருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி ஃபேமிலி டிராமா ஆக்சன் திரில்லராக தயாராக...

Shahrukh Khan's new King poster out!

Image
 ‘கொலையாளி அல்ல..! நான் காதலன்..!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியான நடிகர் ஷாருக்கானின் ‘கிங் - KING’ படத்தின் புதிய போஸ்டர்! இந்தியா முழுவதிலும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த போஸ்டரில் ஷாருக்கானின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது. அதிலும் ஆக்‌ஷன் + தீவிரம் + சிறிதளவு காதல் ஆகியவற்றை ஒன்றிணைத்திருப்பதுடன், உதடுகளுக்கு இடையே ஒரு ரோஜாப்பூவையும், கண்களில் கனல் கக்கும் தீப்பொறியையும், கைகளில் துப்பாக்கியையும் ஏந்தியபடி தோன்றும் ஷாருக்கானின் பிரமிக்க வைக்கும் தோற்றம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. அத்துடன், ஆக்‌ஷன் திரில்லர் என்டர்டெய்னராக உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அவரது மூர்க்கமான அவதாரத்தையும் இந்தப் போஸ்டர் பிரதிபலிப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். ‘கொலையாளி அல்ல; நான் காதலன்!’ என்ற கவனம் ஈர்க்கும் வாசகத்துடன் வெளியாகியிருக்கும் இந்தப் போஸ்டர்...