Narain joins Kamalhaasan-Lokesh's ' Vikram !

 "விக்ரம்" படத்தின் மூலம் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் புகழ்பெற்ற நடிகர் நரேன்


உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் "விக்ரம்" இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் நரேன். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்த கைதி படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் இப்படம் குறித்து நடிகர் நரேன் கூறுகையில் " இது என் வாழ்நாளில் மிக முக்கியமான படம். கைதி படம்  முடித்த பிறகு நான் இரண்டு படங்கள் நடித்து முடித்திருந்தேன்.  



விக்ரம் படத்தின் டீசர் வெளியான போது லோகேஷிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு அவரை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது தான் அவர் சொன்னார், உங்களுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் இப்படத்தில் உண்டு என்பதை! ஒரு கனவு நிறைவேறியதை போல உணர்வு பெறுகிறேன். உலக நாயகன் கமல்ஹாசன் சாரை பார்த்து சினிமாவுக்குள் நுழைந்த பல பேரில் நானும் ஒருவன்! இது ஒரு மகிழ்ச்சியான செய்தி என உளம் நெகிழ்ந்து பேசியுள்ளார்.



Popular posts from this blog

He-Man and Masters of the Universe Tamil Dub: Karthik Is He-Man, Adithya Menon Is Skeletor, Arjun Sarja Is Duncan

நடிகர் அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும் 'அருள்வான்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Dubbing for “Athiradi” in Tamil Was a Memorable Experience – Director-Actor Basil Joseph