Posts

Showing posts from November 10, 2026

நடிகர்கள் பஸில் ஜோசப் (Basil Joseph) - எல். கே. அக்ஷய் குமார் (L. K. Akshay Kumar) இணைந்து நடித்திருக்கும் ‘ராவடி (Raawadi)’ படத்தின் ‘அட்ரா பரமா.. ’ - முதல் பாடல் வெளியீடு!

Image
  மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பேசில் ஜோசப் - ‘சிறை’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் எல். கே. அக்ஷய் குமார் ஆகிய இருவரும் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘ராவடி (Raawadi)’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அட்ரா பரமா..’ எனும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராவடி (Raawadi)’ திரைப்படத்தில் பஸில் ஜோசப், எல். கே. அக்ஷய் குமார், ஜான் விஜய்,  ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், அருணாச்சலேஸ்வரன் PA., சத்யன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளைப் பரத் விக்ரமன் மேற்கொள்ள, தயாரிப்பு வடிவமைப்பாளராகப் பி. எஸ். ஹரிஹரன் பணியாற்றியிருக்கிறார். கமர்ஷியல் என்டர்டெயினராகத் தயாராகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்திருக்கிறார். இப்படத்திற்கு எல். கே. விஷ்ணுகுமார் இணைத் தயாரிப்பாளராகப் பொறுப...

நடிகர் விஜய் சேதுபதியின் சமூகநல முன்னெடுப்பில் தென்காசியில் தீபாவளி நலவாழ்வு விழா!

Image
 *200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள், நலத்திட்ட உதவிகள் – ஏராளமான பொதுமக்களுக்கு மருத்துவச் சேவைகள்!* தீபாவளித் திருநாளை முன்னிட்டு, சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடனும், பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் சமூகப் பொறுப்புணர்வுடனும் தென்காசி மாவட்டம், ஆய்க்குடியில் உள்ள சேனைத் தலைவர் சமூக நலக்கூடத்தில் மாபெரும் தீபாவளி நலவாழ்வு விழா மற்றும் மருத்துவ முகாம் 01.11.2026, ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. துளி அறக்கட்டளை (Thuli Trust) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியை நடிகர் திரு. விஜய் சேதுபதி, திரு. அஜித்குமார் ரவீந்திரன், திரு. சிவாஜி பிரபாகர் மற்றும் திரு. ஜெய் பாலா ஆகியோர் இணைந்து முன்னெடுத்தனர். இந்நிகழ்ச்சி விஜய் சேதுபதி நற்பணி மன்றம், வள்ளலார் வேலைவாய்ப்புச் சேவை இயக்கம் (VVVSI Trust), நர்சிங் ஸ்டேஷன் ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட் மற்றும் தமிழ் மண் அறக்கட்டளை ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்டது. **200 முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தீபாவளி ஆடைகள்!** தீபாவளித் திருநாளின் மகிழ...