இயக்கமா...நடிப்பா...இயக்குநர் ஜேசன் சஞ்சய் பதில்!
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது. நடிகை மகாலக்ஷ்மி, " இந்த திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் சஞ்சய்க்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை". கலை இயக்குநர் பெஞ்சமின், "சஞ்சய் ப்ரோ என்ன கதை சொன்னாரோ அதை தான் படமாக்கியிருக்கிறார். நானும் என் பணியை சரியாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன். என்னுடைய அணியினருக்கு நன்றி". நடிகர் அன்புதாசன், " இந்தப் படத்தில் கேஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சஞ்சய் ப்ரோ, லைகா நிறுவனம் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி". நடிகர் ஷிவ் பண்டிட், "கடந்த ஒன்றரை வருடமாக எங்களுடைய உழைப்பிற்கு ஆதரவு கொடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. வாய்ப்பு கொடுத்த சஞ்சய் ப்ரோ, லைகா நிறுவனத்திற்கு நன்றி". நடிகை ஃபரியா அப்துல்லா, "ரசிகர...