டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!
டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் குமார் தௌரானி, நடிகர் இம்ரான் ஹாஷ்மியுடன் இணைந்து ‘ரூஹ்’ (ROOH) என்ற இசையை மையமாகக் கொண்ட ஹாரர் திரைப்படத்தைத் தயாரிக்கிறார். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாகும் இப்படத்தை மயங்க் ஷர்மா இயக்குகிறார். விஷால் கபூர் மற்றும் மயங்க் ஷர்மா இணைந்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். ஹாரர் மற்றும் காதல் ஆகிய இரு அம்சங்களையும் இசையுடன் இணைத்து, ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாகிறது. ‘ரூஹ்’ திரைப்படம் 2027 ஆம் ஆண்டு இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தி திரையுலகின் மறக்க முடியாத பல ஹாரர் திரைப்படங்களில் நடித்துள்ள இம்ரான் ஹாஷ்மி, மீண்டும் இவ்வகைத் திரைப்படத்தில் நடிக்கிறார். காதல், பிரிவு மற்றும் ஏக்கம் எனப் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் அவரது திரைப்படப் பாடல்கள் ஒரு தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன. அந்த இசைப் பாரம்பரியத்தையும், குமார் தௌரானியின் இசை அனுபவத்தையும் டிப்ஸ் ஃபிலிம்ஸின் தயாரிப்புத் திறனையு...