My Dear Dolly team special gesture!

 *மை டியர் டாdலி படத்தின் வருமானத்தின் ஒரு பகுதியை புற்றுநோய் குழந்தைகளின் சிகிச்சைக்கு வழங்குவோம் - தயாரிப்பாளர் எம்.ஜே‌.சிவராமகிருஷ்ணா அறிவிப்பு*



வி.ஜே.பப்பு மற்றும் அனுபமா இணைந்து நடித்துள்ள திரைப்படம் "மை டியர் டாலி". அரவிந்த் ராஜ் எழுதி, இயக்கி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சிம்ம மூர்த்தி சினிமாஸ் சார்பில் ஜெயராமசந்திரன் மற்றும் சிவராமகிருஷ்ணா தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் கே.பி.ஒய். ராஜவேலு, சுதா, தாரா, கீர்த்தனா, ஆஷா, ராஜாமணி, பேபி தீக்ஷிதா, டொமினிக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.



காதல் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் மை டியர் டாலி திரைப்படம் உலகளவில் இன்று வெளியானது. இந்தப் படத்தில் இரத்த புற்றுநோய் பாதிப்பு குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் சிவராமகிருஷ்ணா படத்தின் வெளியீட்டை ஒட்டி புது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


அதன்படி மை டியர் டாலி திரைப்படத்தின் மொத்த வசூலில் ஒரு பகுதி இரத்த புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு வழங்குவதாக சிவராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்புக்கு திரைத்துறை கடந்து வரவேற்பும், பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. திரையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, படத்தின் வருவாயில் ஒருபங்கை புற்றுநோயை எதிர்த்து போராடும் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வதாக தயாரிப்பாளர் சிவராமகிருஷ்ணா அறிவித்து இருப்பது மனிதம் மீதுள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பதோடு, மேலும் பலரை இப்படி செய்யவும் ஊக்குவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


மை டியர் டாலி திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை பாலாஜி கே சேகர் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சித்தார்த் மேற்கொண்டுள்ளார். எம். ஃபாஸில் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு நிர்வாக தயாரிப்பு பணிகளை ஆர்.திருமலை மேற்கொண்டுள்ளார்.

Popular posts from this blog

He-Man and Masters of the Universe Tamil Dub: Karthik Is He-Man, Adithya Menon Is Skeletor, Arjun Sarja Is Duncan

நடிகர் அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும் 'அருள்வான்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Dubbing for “Athiradi” in Tamil Was a Memorable Experience – Director-Actor Basil Joseph